சமூக இடைவெளி 90%, முகக்கவசம் 65% கொரோனா பாதிப்பை குறைக்கிறது

Updated : ஜூலை 09, 2020 | Added : ஜூலை 09, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
face mask, social distance, decreases, coronavirus, scientists

கலிபோர்னியா: முகக்கவசம் அணிவது கொரோனா பாதிக்கும் அபாயத்தை 65 சதவீதமும், சமூக இடைவெளி 90 சதவீதமும் குறைத்துள்ளதாக கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் டேவிஸ் குழந்தைகள் மருத்துவமனை நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் நோய்க்கு இதுவரை முறையான தடுப்பு மருந்துகள் இல்லாத நிலையில், முகக்கவசமும், சமூக இடைவெளியும் தான் உலக நாடுகள் முழுக்க தடுப்பு மருந்தாக பரிந்துரைக்கப்படுகின்றன. இது எந்த அளவு சிறப்பாக கொரோனாவை தடுக்கிறது என கலிபோர்னிய பல்கலைக்கழக டேவிஸ் குழந்தைகள் மருத்துவமனையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் ஈடுபட்டனர். அதில் இந்த இரண்டு வழிமுறைகளையும் முறையாக பின்பற்றினால் கொரோனா அபாயம் பெருமளவு குறையும் என தெரியவந்துள்ளது.

இது பற்றி ஆய்வாளர்கள் கூறியதாவது: முகக்கவசம் அணிவது நோய்வாய்ப்பட்ட நபரிடம் வைரஸ் பரவுவதை தடுப்பதோடு, ஆரோக்கியமான மக்களையும் நோய்க்கு ஆளாகாமல் தடுக்கிறது. முகக்கவசங்கள் வேலை செய்வதாக நான் நம்பவில்லை என்பவர்கள் அறிவியல் ஆதாரங்களை புறக்கணிப்பவர்கள் ஆவர். இது ஈர்ப்பு விசையை நான் நம்பவில்லை என்று கூறுவதற்கு ஒப்பாகும். இரண்டு முறைகளில் கொரோனா வைரஸ் பரவுகிறது. ஒன்று இருமும்போது அல்லது தும்மும்போது காற்றில் வெளியேற்றப்படும் நீர்த்துளிகள் வழியாகவும், இரண்டாவது நாம் பேசும்போது காற்றில் தெளிக்கும் துகள்கள் வழியாகவும் பரவுகிறது.


latest tamil news



தும்மும்போது வெளியேற்றப்படும் நீர்த்துளிகள் மனித முடியின் அளவில் மூன்றில் ஒரு பங்கு இருக்கும். இருப்பினும் இதனை கண்களால் காணலாம். பேசும் போது தெளிக்கும் துகள்கள் மனித முடியின் நூற்றில் ஒரு பங்கு அளவு தான் இருக்கும். இது கண்களுக்கு தெரியாது. இது தான் மிகவும் ஆபத்தானது. வாசனை எப்படி ஒரு அறைக்குள் பரவுகிறதோ அந்த வேகத்தில் பரவும். நெரிசலான உட்புற இடங்களைத் தவிர்ப்பதன் மூலம் இதனை குறைக்க முடியும். நல்ல காற்றோட்டம் வைரஸை கலைக்கும். சமூக நிகழ்வுகள் வெளிப்புறங்களில் நடப்பது நல்லது. வீட்டிலும் ஜன்னல்களை திறந்து நல்ல காற்றோட்டத்தை அனுமதியுங்கள்.

பல்வேறு வகையான முகக்கவசங்கள் சுவாச மண்டலத்திற்குள் நீர்த்துளிகள் வருவதைத் தடுக்கும். ஒருவர் பேசும் போது 20 முதல் 500 மைக்ரோ மீட்டருக்குள் வெளியேற்றப்படும் நீர்த்துளிகள், துணி முகக்கவசம் அணிந்திருந்தாலே நமக்குள் நுழையாமல் தடுக்கும். சமூக இடைவெளி வைரஸ் பரவும் அபாயத்தை 90 சதவீதமும், முகக்கவசம் 60 சதவீதமும் குறைக்கிறது. உங்கள் குடும்பத்தினர், நண்பர்களைப் பற்றி நீங்கள் அக்கறை கொண்டிருந்தால், அல்லது உங்கள் சமூகத்தைப் பற்றி அக்கறை கொண்டிருந்தால், முகக்கவசம் அணியுங்கள். இவ்வாறு நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
10-ஜூலை-202001:42:47 IST Report Abuse
தல புராணம் தனித்திருக்க தேவையில்லை, தள்ளியிருந்தாலே போதும்.. அதை ஆரம்பம் முதல் சொல்லி வந்திருக்கிறேன். கூட்ட நெரிசல் தான் தள்ளியிருப்பதை தவிர்க்க முடியாமல் செய்கிறது.. கடைகளில் கூட்டத்தை தவிர்க்க கடை நேரத்தை அதிகப்படுத்துவது முக்கியம் என்று சொல்லியிருக்கிறேன். 24 மணி நேரம் கூட ஆக்கலாம் என்று பலமுறை சொல்லியிருக்கிறேன். மூடர்கூடத்துக்கு இன்னும் புரிந்தபாடில்லை.. வாகனங்களுக்கு டில்லி முதல்வர் முன்பு கொண்டு வந்தது போல ஒற்றைப்படை, இரட்டைப்படை எண் சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரலாம்.. மாடுலோ 6.. (Modulo 6) சட்டம், அதாவது உங்கள் வண்டி எண்ணை 6 ஆல் வகுத்தால் என்ன மீதம் வருகிறதோ அந்த வாரநாளில் மட்டும் எடுத்து செல்லலாம். 0 வந்தால் ஞாயிறு, 1 வந்தால் திங்கள், இப்படியே 6 வந்தால் சனி.. "மாறுபட்ட" சகஜநிலை சகஜமாகி விடும். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் படிச்சவன் எல்லாம் ஒரு வருஷத்தில் எத்தனை கோடி கொள்ளையடிக்கலாம் என்பதை யோசிக்கிறதிலேயே இருக்கானுங்க..
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-ஜூலை-202000:23:35 IST Report Abuse
தமிழ்வேல் தேவையான கட்டுரை. பலவிதமான முகக்கவசம் உள்ளது. அதை பற்றியும் அதன் திறன்களை பற்றியும் இந்த கட்டுரையுடன் சேர்த்து "அடிக்கடி" வெளியிடப்பட வேண்டும். இன்று பலர், ஒரே முகக்கவசத்தை நாள் முழுதும் போட்டுக்கொள்வதோடு அதை பராமரிப்பதும் இல்லை. முகக்கவசம் போட்டுக்கொண்டால், அதன் பின் அதன் முன்பக்கத்தில் கையை வைக்கக்கூடாது. வைரஸ் முன்பக்கத்தில் வந்து தங்கி இருக்கலாம். கையை வைத்தால் உடனடியாக, கையை சுத்தம் செய்தாக வேண்டும். இந்த தவறை, ஆஸ்பத்திரியில் வேலை செய்பவர்கள் கூட செய்கின்றனர். காதில் மாட்டும் கயிற்றால் மட்டுமே சரி செய்து கொள்ள வேண்டும். சர்ஜிக்கல் மாஸ்க் மட்டுமே அதிக பாதுகாப்பைத் தருகின்றது. ஆனால் அதையும், சில மணி நேரங்களுக்குமேல் பயன் படுத்திப் பிரயோசனம் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X