பொது செய்தி

தமிழ்நாடு

பாலசந்தர் பிறந்த நாள் நடிகர் ரஜினி உருக்கம்

Added : ஜூலை 09, 2020
Share
Advertisement
 பாலசந்தர் பிறந்த நாள் நடிகர் ரஜினி உருக்கம்

சென்னை; மறைந்த இயக்குனர், கே.பாலசந்தரின், 90வது பிறந்த நாளை முன்னிட்டு பேசிய ரஜினி, 'எனக்கு மட்டுமின்றி, பலருக்கும் வாழ்க்கை கொடுத்தவர், கே.பாலசந்தர்; இன்னும் நிறைய காலம் வாழ்ந்திருக்கலாம்' என, தெரிவித்து உள்ளார்.

வீடியோ பதிவில், ரஜினி பேசியுள்ளதாவது:பாலசந்தரின், 90வது பிறந்த நாள் இன்று. அவர் என்னை, நடிகராக அறிமுகப்படுத்தாமல் விட்டிருந்தால், கன்னடத்தில் சின்ன வேடத்தில் நடித்திருப்பேன். ஆனால், இந்தளவுக்கு பெயர், புகழ் வசதியோடு இருப்பதற்கு பாலசந்தரே காரணம். என்னுள் இருந்த குறையை எல்லாம் நீக்கி, எனக்குள் இருந்த நல்ல விஷயங்களை, எனக்கே அடையாளம் காட்டினார்.

என்னை நல்லநடிகனாக்கி, நட்சத்திரமாக, தமிழ் திரையுலகிற்கு கொடுத்துள்ளார். என்னை பெற்றெடுத்த பெற்றோர், வளர்த்த அண்ணனுக்கு பின், பாலசந்தர் தான், என் வாழ்க்கையில் முக்கியமானவர். எனக்கு மட்டுமின்றி, எத்தனையோ நடிகர்களுக்கு வாழ்க்கை கொடுத்துள்ளார். அவரால் வாழ்ந்தவர்கள் பலர்.நான், எத்தனையோ இயக்குனர்களிடம் பணியாற்றியுள்ளேன்.

ஆனால், செட்டுக்குள் பாலச்சந்தர் வந்து விட்டால், மேலே அமர்ந்திருக்கும் லைட்மேன் கூட, எழுந்து வணக்கம் சொல்வார். அவரது அத்தனை கடமையையும், அவர் சிறப்பாக செய்துள்ளார். ரொம்ப சீக்கிரம் சென்று விட்டார். இன்னும், நிறைய காலம் அவர் வாழ்ந்திருக்கலாம்.இவ்வாறு, ரஜினி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

vbs manian - hyderabad,இந்தியா
10-ஜூலை-202009:07:03 IST Report Abuse
vbs manian எம் ஜி ஆர் சிவாஜி என்று ஹீரோக்களையே நம்பியிருந்த தமிழ் திரை உலகில் கதைகளை ஹீரோக்களாக்கி வெற்றி கண்டவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X