அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அரசு மருத்துவமனையில் சிகிச்சை அமைச்சர்கள் முன்வர வேண்டும்'

Added : ஜூலை 09, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 'அரசு மருத்துவமனையில் சிகிச்சை  அமைச்சர்கள் முன்வர வேண்டும்'

சென்னை; ''அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற, அமைச்சர்கள் முன்வர வேண்டும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர், முருகன் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:பிரதமர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், நாட்டில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.விவசாயிகளுக்கு, 'சன்மான் நிதி' முன்கூட்டியே வழங்கப்பட்டது. தமிழகத்தில் மட்டும், 35 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 'ஜன்தன்' வங்கி கணக்கு வைத்திருக்கும், 20 கோடி பெண்களுக்கு, மாதம், 500 ரூபாய் வழங்கப்பட்டது.

தமிழகத்தில், ஒரு கோடி பெண்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் வரை, கூடுதலாக நபருக்கு, ஐந்து கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு வழங்க, பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.சுயசார்பு பாரதம் திட்டத்திற்கு, 21 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.கொரோனாவில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு, நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை, அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும். மின் கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுவதாக, புகார் எழுகிறது.இதை களைய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசு மருத்துவமனையில், தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அமைச்சர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற முன்வர வேண்டும்.கொரோனா ஊரடங்கு ஆரம்பித்த நாளிலிருந்து, தமிழக பா.ஜ., சார்பில், ஒரு கோடி உணவு பொட்டலங்கள், 35 லட்சம் பேருக்கு, ரேஷன் பொருட்கள், 45 லட்சம் முக கவசம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு கோடி முக கவசம் தயாராகி வருகிறது.கேரளாவில் நடந்த தங்கக் கடத்தல் விவகாரத்தில், நியாயமாக விசாரணை நடத்த வேண்டும். கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகி, விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
14-ஜூலை-202004:15:52 IST Report Abuse
J.V. Iyer நன்று சொன்னீர்கள் முருகன் அவர்களே இதை அதிமுக அமைச்சர்கள் செய்வார்களா?
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
13-ஜூலை-202011:46:05 IST Report Abuse
Malick Raja முருகான்னு பெயரை வச்சுக்கின்னு பொய்ய சொல்லிக் குனியேறியேப்ப்பா .. எங்கே கட்டுப்படுத்தப்பட்டிருக்குன்னு சொன்னா பேஷா இருக்கும் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X