சோனியா பதவி நீட்டிப்பு? காங்., செயற்குழு முடிவு!

Updated : ஜூலை 11, 2020 | Added : ஜூலை 09, 2020 | கருத்துகள் (35)
Share
Advertisement
Congress, Sonia, Sonia Gandhi, சோனியா, சோனியா காந்தி, காங்கிரஸ்

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியாவின் பதவிக் காலத்தை மேலும் சில மாதங்களுக்கு நீட்டிக்க, கட்சியின் செயற்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., அபார வெற்றி பெற்றதை அடுத்து, காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்தார். கட்சியின் மூத்த தலைவர்கள் வற்புறுத்தியும், அவர் கேட்கவில்லை. இதையடுத்து, கடந்தாண்டு ஆகஸ்ட், 10ல், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா, 73, நியமிக்கப்பட்டார். 'கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை, தற்காலிக தலைவராக சோனியா நீடிப்பார்' என, காங்., செயற்குழு அறிவித்தது.

இடைக்கால தலைவராக சோனியா பொறுப்பேற்று, அடுத்த மாதத்துடன், ஒரு ஆண்டு முடிவடையவுள்ளது. இதுவரை புதிய தலைவர் தேர்வு செய்யப்படாததால், தேர்தல் ஆணையத்துக்கு இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

காங்., மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டிய சூழலில், கொரோனா பிரச்னை காரணமாக, நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், செயற்குழு கூட்டத்தை நடத்த முடியாத சூழல் உள்ளது. எனவே, சோனியாவின் பதவிக் காலத்தை, மேலும் சில மாதங்களுக்கு நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, கட்சியின் சட்ட விதிகளில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. இது பற்றிய விபரம், தேர்தல் ஆணையத்திடம் முறைப்படி தெரிவிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
11-ஜூலை-202005:08:30 IST Report Abuse
skv srinivasankrishnaveni யார் தருவா இந்த அரியாசனம் உனக்கு நீ உன் பொண்ணு பிள்ளைமருமகன் பேரன்பேத்திக்கு தான் கான் கிரேஸ் என்பது எழுதாத சட்டமாச்சுதே
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
10-ஜூலை-202019:15:26 IST Report Abuse
Nagarajan D தனியார் சொத்தில் யாருக்கு என்ன உரிமை இருக்கும். காங்கிரஸ் ஒரு தனியார் தொழில் அதில் அந்த திருட்டு குடும்பம் மட்டுமே உரிமை கொண்டாட முடியும்
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
10-ஜூலை-202018:45:40 IST Report Abuse
Vijay D Ratnam கான்.கிராஸ் காவடித்தூக்கிகளின் இம்போர்ட்டட் பாரதமாதா ஃப்ரம் இட்டாலியை விட்டால் வேறு யார் இருக்கா. கிடக்குறது கிடக்கட்டும் கெழவிய தூக்கி மனைல வய்யி என்ற பழமொழி ஞாபகத்துக்கு வருதுல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X