கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து; இந்திய-அமெரிக்க நிபுணர்கள் முயற்சி

Updated : ஜூலை 11, 2020 | Added : ஜூலை 09, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
India, US, ayurveda, Corona Virus, Covid19, இந்தியா, அமெரிக்கா, ஆயுர்வேதம், கொரோனா, ஆயுர்வேத மருந்து, இந்தியா, அமெரிக்கா

வாஷிங்டன் : இந்திய - அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த, ஆயுர்வேத சிகிச்சை அளிக்கும்மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, கொரோனாவை தடுக்க ஆயுர்வேத மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியை துவக்கி உள்ளனர். இ

ந்திய - அமெரிக்க அறிவியல் மையம் சார்பில், இந்த இரு நாடுகளைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த இந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அமெரிக்காவுக்கான இந்திய துாதர் தரன்ஜித் சாந்து கூறியதாவது:

கொரோனா வைரஸ் உலகம் முழுதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு ஆயுர்வேத முறை வாயிலாக தீர்வு காண முடியுமா என்பது குறித்து, பலரும் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, இந்திய - அமெரிக்காவைச் சேர்ந்த ஆயுர்வேத சிகிச்சை நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியை துவக்கியுள்ளனர்.

இதற்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இரு தரப்பிலிருந்தும், பயனுள்ள கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிக்கு இந்திய - அமெரிக்க அறிவியல் மையம் முழு ஆதரவையும் அளிக்கும். இந்த ஆராய்ச்சியால் கிடைக்கும் நன்மைகள், இந்தியா - அமெரிக்கா என, இரு நாடுகளுக்கு மட்டும் பயன் அளிக்கக் கூடியது என, கருதிவிடக் கூடாது. ஒட்டு மொத்த உலக நாடுகளுக்கும் இதனால் பயன் கிடைக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
10-ஜூலை-202023:48:58 IST Report Abuse
Rajas ஆயுர்வேதம் நமது மருத்துவம். இதில் எதற்கு அமெரிக்காவுடன் கூட்டு சேர வேண்டும். அரிசி உமி கதை தான்.
Rate this:
Cancel
K.UDHAYAKUMAR - coimbatore,இந்தியா
10-ஜூலை-202022:40:10 IST Report Abuse
K.UDHAYAKUMAR Yezdi k demo. Don't comment without knowing about healer basker. Lakhs of peoples benefited by following healer basker. I am also one of them.
Rate this:
Cancel
Jit Onet - New York,யூ.எஸ்.ஏ
10-ஜூலை-202018:22:05 IST Report Abuse
Jit Onet சிலசமயம் நாமெல்லாம் இந்திய மக்கள், வம்சாவளி இரு சொல்லிக் கொள்ள வெட்கப்பட வேண்டும். இந்த ஆராய்ச்சியை 5 மாதங்கள் முன்னால் ஏன் ஆரம்பிக்கல? சென்ட்ரல் கோவெர்மெண்டுல, ஸ்டேட் கோவெர்மெண்டுல இஞ்சியும் ஒருவருக்கும் ஆயுர்வேத முறை பற்றி தெரியாதா ? சரி, எவ்வளவு பெரிய தொழிலதிபர்கள் கோடி கோடியா தண்ணி வித்து சம்பாதிக்கறானுங்க அவுனுகளுக்கும் தோன்றவில்லையா? ஏன் இப்படி நாம்ப நம்ப உயிருக்கு ஆபத்து வரும்போது கூட மூளை உத்வேகம் இல்லாமல் ஆகிவிட்டோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X