சென்னை : 'சொத்து வரி வசூலிப்பதை, சென்னை மாநகராட்சி, ஆறு மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:மார்ச் மாதத்தில் வெளியூர் சென்றவர்கள், சென்னைக்கு திரும்பி வரவில்லை.வேலை, தொழில், சுயதொழில், வியாபாரம் உள்ளிட்ட, அனைத்து வருமானத்தையும் இழந்துள்ளனர். தங்கள் வாழ்க்கையை, 'இனி ஆரம்பத்தில் இருந்து துவங்க வேண்டுமோ...'என்ற, மிகப்பெரிய அச்சத்தில், சென்னை வாசிகள் தவிக்கின்றனர்.
இதுபோன்ற இக்கட்டான தருணத்தில், சொத்து வரி செலுத்துங்கள் என, எச்சரிக்கை விடுவது மனித நேயமற்றது. கொரோனா கால ஊழலுக்கு புகலிடமாக திகழும் சென்னை மாநகராட்சி, கமிஷன் வசூல் செய்வதற்கான டெண்டர்களை ரத்து செய்து, நிதி நிலைமையை சரி செய்யலாம். ஆனால், அது போன்ற டெண்டர்களை அனுமதித்து கொண்டே, வருவாய் என்ற காரணம் காட்டி, சொத்து வரியை உடனே செலுத்துங்கள் என, மாநகராட்சி கெடுபிடி செய்வதை ஏற்க முடியாது.
சென்னை மாநகராட்சியின் சொத்து வரி வசூல் அறிவிப்பை திரும்ப பெற்று, இந்த வரி வசூலை குறைந்தபட்சம், இன்னும் ஆறு மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.மூத்த பத்திரிகையாளர் எம்.பி.திருஞானம் மறைவுக்கும், ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE