கேரளாவில் புதிதாக 339 பேருக்கு கொரோனா| 339 new covid 19 cases in Kerala | Dinamalar

பொது செய்தி

இந்தியா

கேரளாவில் புதிதாக 339 பேருக்கு கொரோனா

Updated : ஜூலை 10, 2020 | Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (3)
Share
kerala, corona, coronavirus, covid 19,  கேரளா, கொரோனா, தொற்று, பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே நாளில் மேலும் 339 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதனால் அங்கு தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,534 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மொத்தம் 2,795 பேர் சிகிச்சயைில் உள்ளனர். கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில் 117 பேர் வெளிநாடுகளில் இருந்தும் 74 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மற்றவர்கள் உள்ளூர்வாசிகள் என கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


latest tamil news



மாநிலத்தில் மொத்தம் 1,85,960 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 3,261 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். இதுவரை மொத்தம்2,20,627 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதில் 4,854 பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X