செய்தி சில வரிகளில்...

Added : ஜூலை 10, 2020
Share
Advertisement
 செய்தி சில வரிகளில்...

மெலனியா டிரம்ப் சிலைதீ வைத்து எரிப்பு

ராஸ்னோ: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி மெலனியா, மத்திய ஐரோப்பிய நாடான, ஸ்லோவேனியாவில் உள்ள, செவ்னிகா என்ற ஊரை சேர்ந்தவர். இங்கு, மெலனியாவுக்கு, மரத்தால் ஆன, ஆள் உயர சிலை அமைக்கப்பட்டது. ஜெர்மனியில் வசிக்கும், அமெரிக்க சிற்பி, பிராட் டவுனி என்பவர், இந்த சிலையை உருவாக்கி, அங்கு வைத்தார். இந்நிலையில், அமெரிக்க சுதந்திர தினமான, 4ம் தேதியன்று, மெலனியாவின் மர சிலை தீயிட்டு எரிக்கப்பட்டது. தீ வைத்த விஷமிகளை, போலீசார் தேடி வருகின்றனர்.

ஓரினத்தவர் சேர்ந்து வாழதாய்லாந்து கேபினட் ஒப்புதல்

பாங்காக்: தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில், ஒரே இனத்தை சேர்ந்த இருவர், ஒன்றாக சேர்ந்து வாழ்வதற்கு, அந்நாட்டு கேபினட், நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா, விரைவில், அந்நாட்டு பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட உள்ளது. திருமணம் செய்து கொண்டு வாழும் ஆண், - பெண்ணுக்கு வழங்கப்படும், அனைத்து சட்ட உரிமைகளும், ஒரே இனத்தை சேர்ந்தவர்களுக்கும் வழங்க, இந்த மசோதா வழி செய்கிறது.

நாய் இறைச்சிக்குகம்போடியாவில் தடை

நோம் பென்: தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில், ஆண்டொன்றுக்கு, 20 முதல் 30 லட்சம் நாய்கள், இறைச்சிக்காக கொல்லப்படுவதாக, சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. இதற்கு, பல்வேறு தரப்பினரும், எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், உலகப் புகழ் வாய்ந்த, கம்போடியாவின் அங்கோர் வாட் கோவில் அமைந்துள்ள, சீம் ரீப் மாகாணத்தில் மட்டும், இறைச்சிக்காக நாய்களை கொல்லவும், இறைச்சி வாங்கவும், விற்கவும், தடை விதிக்கப்பட்டுள்ளது. 'மீறினால், சிறை தண்டனையுடன், அபராதம் விதிக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் கடும் மழைசுற்றுலா தலங்கள் பாதிப்பு

டோக்கியோ: கிழக்காசிய நாடான ஜப்பானில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழைக்கு, இதுவரை, 60 பேர் பலியாகி உள்ளனர். மத்திய ஜப்பானில் அமைந்துள்ள, இயற்கை எழில் கொஞ்சும் மலை பிரதேசமான, நகானோ மற்றும் கிபு பகுதிகளில், நிலச்சரிவு மற்றும் மழை நீர் தேங்கி இருப்பதால், கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.-

பாக்.,கில், 'கொரோனா'2.40 லட்சத்தை கடந்தது

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், கடந்த, 24 மணி நேரத்தில், 61 பேர், 'கொரோனா' தொற்றுக்கு பலியாகினர். புதிதாக, 3,359 பேருக்கு, தொற்று உறுதியானது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2.40 லட்சத்தை கடந்தது. பலியானோர் எண்ணிக்கை, 4,983 ஆக உயர்ந்தது.-------------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X