எனக்கு எதுவுமே தெரியாது: கை விரிக்கும் ஸ்வப்னா

Updated : ஜூலை 10, 2020 | Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (71)
Share
Advertisement
புதுடில்லி : கேரளாவில், 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கின் முக்கிய புள்ளியாக கருதப்படும் ஸ்வப்னா, கேரள உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், 'நான் அப்பாவி... எனக்கு எதுவும் தெரியாது. துாதரக அதிகாரிகள் இதில் என்னை சிக்க வைத்து விட்டனர்' என, தெரிவித்துள்ளார். கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
Kerala gold smuggling case, gold smuggling case, Swapna suresh

புதுடில்லி : கேரளாவில், 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கின் முக்கிய புள்ளியாக கருதப்படும் ஸ்வப்னா, கேரள உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், 'நான் அப்பாவி... எனக்கு எதுவும் தெரியாது. துாதரக அதிகாரிகள் இதில் என்னை சிக்க வைத்து விட்டனர்' என, தெரிவித்துள்ளார். கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 30 கிலோ தங்கம் சிக்கியது; இதன் சர்வதேச மதிப்பு, 15 கோடி ரூபாய்.


தலைமறைவு
latest tamil newsஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரக அலுவலகத்தில் ஏற்கனவே பணியாற்றிய சர்ஜித், ஸ்வப்னா ஆகியோர், இந்த கடத்தலின் பின்னணியில் இருப்பது தெரிய வந்தது. சர்ஜித் கைது செய்யப்பட்டார்; ஸ்வப்னா தலைமறைவானார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரக அலுவலகத்திலிருந்து, ஆறு மாதங்களுக்கு முன் ராஜினாமா செய்த ஸ்வப்னா, கேரள மாநில அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில், அதிகாரியாக பணியாற்றி வந்துஉள்ளார். தகவல் தொழில்நுட்ப துறை செயலராகவும், முதல்வரின் முதன்மை செயலராகவும் பணியாற்றியவரான சிவசங்கருக்கும், ஸ்வப்னாவுக்கும் தொடர்பிருப்பதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இதையடுத்து, முதல்வரின் முதன்மை செயலர் பொறுப்பிலிருந்து, சிவசங்கர் அதிரடியாக நீக்கப்பட்டார்.


சந்தேகம்இந்நிலையில், தலைமறைவாக உள்ள ஸ்வப்னா, கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள முன் ஜாமின் மனுவில் கூறியுள்ளதாவது:தங்கக் கடத்தல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் அப்பாவி. என் மீது குற்றப் பின்னணி எதுவும் இல்லை. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிளை அலுவலகத்தில் பணியாற்றும் சில அதிகாரிகள், இந்த வழக்கில் என்னை சிக்க வைத்துள்ளனர்.துாதரக அலுவலகத்திலிருந்து ராஜினாமா செய்தாலும், அங்குள்ள அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, சில வேலைகளை செய்து கொடுத்து வந்தேன். துாதரக அலுவலகத்தில் பணியாற்றும் ரஷீத் காமிஸ் என்பவர், விமான நிலையத்துக்கு வந்திருந்த பார்சலை, சுங்கத் துறை அதிகாரிகள் தர மறுப்பதாகவும், உதவும்படியும், என்னிடம் போனில் பேசினார். பார்சலை தர மறுத்தால், அதை, மீண்டும் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கே திரும்ப அனுப்ப ஏற்பாடு செய்யும்படியும், அவர் வலியுறுத்தினார்.இதற்காக சுங்கத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது தான், என்னை அவர்கள் சந்தேகப்பட்டனர். எனக்கு முன் ஜாமின் அளிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


என்.ஐ.ஏ., விசாரணைதிருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க, மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்து உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sesh - Dubai,பகாமஸ்
15-ஜூலை-202023:32:48 IST Report Abuse
Sesh this case also going to be end like our 2 container cash load case (2016). until now no one caught but file closed.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
13-ஜூலை-202005:03:06 IST Report Abuse
J.V. Iyer இந்த பூனையும் பால் குடிக்குமா? அதான் தெரியாது என்று சொல்லி விட்டார்களே? அப்புறம் என்ன? விட்டுவிட வேண்டியதுதான்.
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
15-ஜூலை-202014:14:58 IST Report Abuse
s.rajagopalanஅழகா இருக்கா ல்லே ...அது போதும் ...காப்பாற்றி விடும் நம்ம ஆளுங்க யோக்யதை தெரியாதா ?...
Rate this:
Cancel
COW URINE SANGI - tamilnadu,இந்தியா
12-ஜூலை-202011:32:46 IST Report Abuse
COW  URINE  SANGI கம்யூனிஸ்ட் ஆட்சியில் குற்றவாளியை பிடிக்க தான் போகிறார்கள் , பினராயி விஜயன் எந்த விசாரணைக்கும் தயார் என்றிருக்கிறார் ,
Rate this:
KavikumarRam - Indian,இந்தியா
12-ஜூலை-202016:31:03 IST Report Abuse
KavikumarRamoru seena kaikkoolikku...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X