உலக நிறுவனங்களை வழி நடத்தும் 58 இந்திய வம்சாவளி அதிகாரிகள்

Updated : ஜூலை 10, 2020 | Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
business, indian business leaders, india

வாஷிங்டன் : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 58 பேர், சர்வதேச நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் உள்ளது, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த, இந்தியஸ்போரா நிறுவனம், சர்வதேச நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாக பணியாற்றும் இந்திய வம்சாவளியினர் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது: அமெரிக்கா, கனடா, பிரிட்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட, 11 நாடுகளிலிருந்து செயல்படும் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 58 பேர் பணியாற்றுகின்றனர். இதில், இந்தியாவில் இருந்து பிற நாடுகளில் குடியேறியோர் மற்றும் அமெரிக்கா, எத்தியோப்பியா, பிரிட்டன், உகாண்டா உள்ளிட்ட நாடுகளில் பிறந்த இந்திய வம்சாவளியினரும் அடங்குவர்.

இவர்கள் தலைமையில் செயல்படும் நிறுவனங்கள் ஆண்டுக்கு, 75 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் ஈட்டுகின்றன. இந்நிறுவனங்களில், 36 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். மேலும், இந்நிறுவனங்கள், ஆண்டுக்கு, 23 சதவீத வருவாயை, பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கி வருகின்றன. இது, அமெரிக்க பங்குச்சந்தையில், 'எஸ் அண்டு பி' குறியீட்டில் உள்ள, 500 நிறுவனங்கள் அளித்த, 10 சதவீத வருவாயை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வம்சாவளி தலைமை செயல் அதிகாரிகள் பட்டியலில், ஐந்து பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.


latest tamil news


இது, 'பார்ச்சூன்' இதழின், 'டாப் 1000' நிறுவனங்களில் இடம் பெற்றுள்ள, 61 பெண் தலைமை செயல் அதிகாரிகளுடன் ஒப்பிடும்போது, விகிதாச்சார அடிப்படையில் அதிகம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, சுந்தர் பிச்சை, மாஸ்டர் கார்டு நிறுவனத்தின், அஜய் பங்கா, வெர்டெக்ஸ் பார்மா நிறுவனத்தின், ரேஷ்மா கேவல்ரமணி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

''தகவல் தொழில்நுட்பம் மட்டுமின்றி, வங்கி, மின்னணு, நுகர்வோர் சாதனங்கள், மருந்து உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களில், 37 - 74 வயது வரையிலான, இந்திய வம்சாவளியினர், தலைமை செயல் அதிகாரி களாக பணியாற்றுவது பெருமைக் குரியது,''என, இந்தியஸ் போரா நிறுவனர் எம்.ஆர். ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
13-ஜூலை-202005:08:40 IST Report Abuse
J.V. Iyer சாதிக்கவேண்டும் என்று நினைக்கும் இந்தியர்களுக்கு உகந்த இடம், தமிழ் நாடோ, இந்தியாவோ அல்ல. நோபல் பரிசு பெற்ற தமிழர்கள், தமிழ்நாட்டில் சாதிக்கவில்லை. அப்படி சாதித்தவர்களுக்கு, தமிழ்நாட்டில் அவர்கள் நினைவாக அரசு ஏதும் செய்யவில்லை.
Rate this:
Cancel
sathyam - Delhi,இந்தியா
11-ஜூலை-202013:59:27 IST Report Abuse
sathyam சொரியானுக்கு நன்றி , சும்மா பஜனை பாடி , பூஜை செஞ்சு தயிர் சாதம் சாப்பிட்ட ஆளுங்களை இப்போ பல நாடுகளில் தலைமை பொருப்பில் உட்காரவைத்து திராவிஷ குஞ்சுகளுக்கு நன்றி பல .
Rate this:
Cancel
G.S.KRISHNAMURTHI - chennai,இந்தியா
10-ஜூலை-202021:20:52 IST Report Abuse
G.S.KRISHNAMURTHI இந்தியாவுக்கு நல்லபெரு கிடைச்சா சரி .திராவிட கட்சிகளால் கெட்டபேறுதான் கிடைக்குது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X