பொது செய்தி

இந்தியா

பாடங்கள் நீக்கம் ஏன்? அமைச்சர் விளக்கம்!

Updated : ஜூலை 11, 2020 | Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
False Narrative, CBSESyllabus, Ramesh Pokhriyal,  CBSE,  HRD Minister

புதுடில்லி : 'சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளுக்கான பாடங்கள் சிலவற்றை நீக்கியுள்ளது தொடர்பாக, தவறான உள்நோக்கத்துடன் சிலர், விஷமச் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். மாணவர்களுக்கான சுமையை குறைக்கவே, 34 பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன' என, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கால், பள்ளிகளில், 'ஆன்லைன்' மூலமாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டில் ஏற்கனவே சில மாதங்களை இழந்துள்ள நிலையில், பாடச் சுமையை குறைக்கும் வகையில், சில பாடங்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து,'குடியுரிமை, மதச்சார்பின்மை போன்ற பாடங்களை நீக்கியுள்ளதன் மூலம், தன் கொள்கைகளை திணிக்க மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு முயற்சிக்கிறது' என, எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.

இது குறித்து, பா.ஜ.,வை சேர்ந்த, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளதாவது: கொரோனா காலத்தில், மாணவர்களின் சுமையை குறைக்கும் வகையில், 34 பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. ஆனால், சில பாடங்களை மட்டும் குறிப்பிட்டு, விமர்சனம் செய்து வருகின்றனர். இதன் மூலம் மக்களுக்கு பீதி ஏற்படுத்தி, பிரச்னையை தீவிரமாக்குவது தான், அவர்களுடைய நோக்கம்.

பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்திய பிறகே, நிபுணர் குழு அளித்த பரிந்துரையின்படி, இந்த பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. எனவே, கல்வியிலும் அரசியல் செய்ய வேண்டாம் என, பொய் தகவல்களை வெளியிடுவோரை கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murthy - Bangalore,இந்தியா
10-ஜூலை-202014:10:31 IST Report Abuse
Murthy எப்படியோ காவிமயமாக்க வேண்டும் கல்வியை, இதுதான் பிஜேபி ன் கனவு திட்டம். அடுத்து மீண்டும் ஆட்சிக்கு வராமல் இருந்தால் இதை தடுக்கலாம்.
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
10-ஜூலை-202009:11:31 IST Report Abuse
mathimandhiri இந்த நாட்டில் உண்மையான மதச்சார்பின்மை இருந்தா எதற்காக இந்துக் கோயில்களின் வருமானத்திலிருந்து வகுப்புக்கும், மாற்றத்திற்கும் அள்ளி விடறாங்க. இங்குள்ள மதச்சார்பின்மை பெரும்பான்மையினரை அழித்து சிறுபான்மையினரை பெரும்பான்மையினராக மாற்றத் தானே பயன் படுகிறது. காங்கிரஸ் காரன் கொண்டு வந்த பாட திட்டம் ஒரு ஹம்பக் . மேற்சொன்ன இலக்கை அடைவதற்காகத் தான்.
Rate this:
Cancel
Naganathan - M.Reddiapatti,இந்தியா
10-ஜூலை-202007:58:05 IST Report Abuse
Naganathan இந்த இக்கட்டான சூழ்நிலையில் பள்ளி பாடங்கள் தேவையா... தொடர்ந்து பாடம் நடத்த வில்லையென்றால் படிப்பு மறந்து விடும் என்றால் மாணவர்களுக்கு நீங்கள் தரும் கல்வி எந்த லட்சனத்தில் இருக்குனு பாருங்க....ஏன்னா அரசு கல்வி சரியாக இருக்காது என்பதால் என்னவோ தனியார் பள்ளிகள் மூலைக்கு நாலுன்னு திறக்க அனுமதி கொடுத்து அரசு தான் முகத்தில் கரிய பூசுவது இதான் நாகரீகமா? வரலாறு படிக்காத ஆட்கள் ஆட்சி செய்வதால் தானே இந்த நிலை கல்வி கண் திறந்த காமராஜரை ஆண்ட ஆட்சியை நினைத்து பாருங்கள் உண்மை தெரியும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X