பாடங்கள் நீக்கம் ஏன்? அமைச்சர் விளக்கம்!| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பாடங்கள் நீக்கம் ஏன்? அமைச்சர் விளக்கம்!

Updated : ஜூலை 11, 2020 | Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (4)
Share
புதுடில்லி : 'சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளுக்கான பாடங்கள் சிலவற்றை நீக்கியுள்ளது தொடர்பாக, தவறான உள்நோக்கத்துடன் சிலர், விஷமச் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். மாணவர்களுக்கான சுமையை குறைக்கவே, 34 பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன' என, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும்
False Narrative, CBSESyllabus, Ramesh Pokhriyal,  CBSE,  HRD Minister

புதுடில்லி : 'சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளுக்கான பாடங்கள் சிலவற்றை நீக்கியுள்ளது தொடர்பாக, தவறான உள்நோக்கத்துடன் சிலர், விஷமச் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். மாணவர்களுக்கான சுமையை குறைக்கவே, 34 பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன' என, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கால், பள்ளிகளில், 'ஆன்லைன்' மூலமாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டில் ஏற்கனவே சில மாதங்களை இழந்துள்ள நிலையில், பாடச் சுமையை குறைக்கும் வகையில், சில பாடங்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து,'குடியுரிமை, மதச்சார்பின்மை போன்ற பாடங்களை நீக்கியுள்ளதன் மூலம், தன் கொள்கைகளை திணிக்க மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு முயற்சிக்கிறது' என, எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.

இது குறித்து, பா.ஜ.,வை சேர்ந்த, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளதாவது: கொரோனா காலத்தில், மாணவர்களின் சுமையை குறைக்கும் வகையில், 34 பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. ஆனால், சில பாடங்களை மட்டும் குறிப்பிட்டு, விமர்சனம் செய்து வருகின்றனர். இதன் மூலம் மக்களுக்கு பீதி ஏற்படுத்தி, பிரச்னையை தீவிரமாக்குவது தான், அவர்களுடைய நோக்கம்.

பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்திய பிறகே, நிபுணர் குழு அளித்த பரிந்துரையின்படி, இந்த பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. எனவே, கல்வியிலும் அரசியல் செய்ய வேண்டாம் என, பொய் தகவல்களை வெளியிடுவோரை கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X