திருமலை ஊழியர்களுக்கு தீயாக பரவும் கொரோனா

Updated : ஜூலை 10, 2020 | Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
Tirumala, Tirupati, tirupati Devasthanam, covid 19, coronavirus,  திருமலை, ஊழியர்கள், கொரோனா

திருப்பதி: திருமலையில், பணிபுரியும் தேவஸ்தான ஊழியர்களுக்கு, கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது.

கொரோனா பரவலை தடுக்க, திருமலையில் மார்ச், 20 முதல், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பல்வேறு கட்ட பொது முடக்கத்திற்கு பின், அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் ஜூன், 8 முதல், ஏழுமலையான் தரிசனம் அனுமதிக்கப்பட்டது. இதனால் பக்தர்களின் எண்ணிக்கை தினசரி, 12 ஆயிரமாக உயர்ந்தது.


latest tamil news



இந்நிலையில், தேவஸ்தான ஊழியர்கள், அர்ச்சகர்கள், பாதுகாப்பு ஊழியர்கள் என, 17 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் தேவஸ்தானம் நடத்தி வரும், 'சிம்ஸ்' மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடந்தது.

இதில், கொரோனா தொற்று எண்ணிக்கை, 50க்கும் அதிகமாக உயர்ந்தது. இதையடுத்து, ஊழியர்களின் நலன் கருதி, திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி பசந்த் குமார் தலைமையில், குழு ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.S.KRISHNAMURTHI - chennai,இந்தியா
10-ஜூலை-202021:12:56 IST Report Abuse
G.S.KRISHNAMURTHI எப்பிடியோ கோவிலை மூட காரணம் கிடைச்சுடுது .சிலருக்கு ரொம்போ சந்தோஷம்
Rate this:
Cancel
Saravanan AE - Navi Mumbai,இந்தியா
10-ஜூலை-202019:46:37 IST Report Abuse
Saravanan AE பக்தர்களுக்கு சேவை செய்யும் அறப்பணியில் இருப்பவர்களுக்கும் நோய் ஏற்படுவது வருத்தமாக இருக்கிறது. அவர்கள் பக்தர்களிடமிருந்து விலகி இருக்கவும், கோயிலுக்குள் பேசுவதை தடை செய்வதும் என இதனால் நோய் தொற்று விகிதத்தை குறைக்க முடியும். லாக் டவுன்-ஐ தொடர்ந்து கொண்டே இருக்க முடியாது. நாம் விதி முறைகளைப் பின்பற்றினால், இந்த நோயைக் குறைக்கலாம். அவ்வாறில்லாது, விதிகளைப் பின்பற்றாது லாக் டவுன் செய்வதால் பலன் குறைவாகவே இருக்கும்.
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
10-ஜூலை-202014:24:20 IST Report Abuse
Tamilan மற்ற மதவாதிகள், ஒதுக்கப்பட்ட பிரிவினரை கோவிலுக்குள் அனுமதிக்காமல் தடுத்தால் இதில் பாதியை குறைத்திருக்கலாம் . இருப்பினும் மக்கள் கூட்டத்தில் விஷமிகளை கண்டறிவது முடியாத காரியம் . நாடுமுழுவதும் தீண்டாமை ஒன்று மட்டுமே இத்தகைய சூழ்நிலையை சமாளிக்க உதவும் . தீண்டாமையை இக்காலதிர்கேற்றவாறு மாற்றியமைத்து சட்டமாக்கவேண்டும் . கொரோனா அதையும் விட பன்மடங்கு உயர்ந்தது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X