பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை

Updated : ஜூலை 10, 2020 | Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை : அமைச்சர் தங்கமணிக்கு, கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, முதல்வருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.தலைமை செயலகத்தில், இம்மாதம், 7ம் தேதி, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின், இணையதள துவக்க விழா நடந்தது. இந்த விழாவில், முதல்வருடன், மின்துறை அமைச்சர், தங்கமணி பங்கேற்றார்.மறுநாள் அமைச்சர் தங்கமணிக்கு,
edappadi palanisamy, EPS, Corona Test, Tamil Nadu CM, coronavirus, coronavirus chennai, முதல்வர், பழனிசாமி, கொரோனா, பரிசோதனை

சென்னை : அமைச்சர் தங்கமணிக்கு, கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, முதல்வருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.

தலைமை செயலகத்தில், இம்மாதம், 7ம் தேதி, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின், இணையதள துவக்க விழா நடந்தது. இந்த விழாவில், முதல்வருடன், மின்துறை அமைச்சர், தங்கமணி பங்கேற்றார்.

மறுநாள் அமைச்சர் தங்கமணிக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவரது மகன், கார் டிரைவர் மற்றும் உதவியாளர்களுக்கும், கொரோனா தொற்று பாதித்துள்ளது. அதைத் தொடர்ந்து, முதல்வருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக, தகவல் வெளியானது.


latest tamil newsஇதுகுறித்து, முதல்வர் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், 'முதல்வருக்கு அவ்வப்போது, பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. முதல்வர் அலுவலக ஊழியர்களுக்கு, 10 நாட்களுக்கு ஒரு முறை, பரிசோதனை நடத்தப்படுகிறது' என்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
10-ஜூலை-202022:39:08 IST Report Abuse
Visu Iyer அதிமுக வினரை குறி வைக்கும் கொரநா...? ஏன் புரிகிறதா..? கட்சி வாரியாக கொரநா பாதித்தவர்கள் குணம் அடைந்தவர்கள் என பட்டியல் கிடைக்குமா? இதுவரை பாஜாகவில் எத்தனை பேர், திமுக வில் எத்தனை பேர், நாம் தமிழர் கட்சியில் எத்தனை பேர், தேமுதிக வில் எத்தனை பேர் என எல்லா கட்சியிலும் பாதிக்கப் பட்டவர்கள் புள்ளி விவரம் கிடைத்தால் நன்றாக இருக்கும்.. மாவட்ட வாரியாக தகவல் தரும் செய்தி ஊடகங்கள் இது போல புள்ளி விவரம் தரும?
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
10-ஜூலை-202007:38:18 IST Report Abuse
தல புராணம் இவரும் பெரும்பணக்காரர் தான்..
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
10-ஜூலை-202006:23:56 IST Report Abuse
D.Ambujavalli ‘துரைமுருகனுக்கு எழுபது வயதாகிவிட்டதால் பயப்படுகிறார்’ என்று கேலி பேசியவர், சக அமைச்சருக்குத் தொற்று என்றதும் ஸ்பெஷல் பரிசோதனை செய்து கொள்கிறார் எல்லாருக்கும் உயிர் வெல்லக்கட்டிதான், புரிந்துகொண்டால் சரி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X