உட்கட்சி பிரச்னையால் சிக்கல்; நேபாள பிரதமர் ஒலி கலக்கம்| Oli, Prachanda don't back down, Nepal ruling party stares at split | Dinamalar

உட்கட்சி பிரச்னையால் சிக்கல்; நேபாள பிரதமர் ஒலி கலக்கம்

Updated : ஜூலை 10, 2020 | Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (4)
Share
nepal prime minister, nepal, Prime Minister K P Sharma Oli,
உட்கட்சி, பிரச்னை,சிக்கல்; நேபாள ,பிரதமர்,ஒலி கலக்கம்

காத்மாண்டு, :உள்கட்சி பிரச்னைக்கு தீர்வு காண, ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் செயல் தலைவர் பிரசந்தாவுடன், பிரதமர் கே.பி.சர்மா ஒலி நடத்திய பேச்சுகள், தோல்வியில் முடிந்துள்ளன. இதனால், ஆளும் கட்சியில் பிளவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அண்டை நாடான நேபாளம், சமீப காலமாக இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது.இந்தியாவின் சில பகுதிகளை, தங்கள் நாட்டு வரைபடத்தில் இணைத்து, அந்த பகுதிகளுக்கு உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.


latest tamil newsஇதற்கிடையே, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பார்லிமென்டில், பட்ஜெட் கூட்டத் தொடரை, பிரதமர் சர்மா ஒலி ஒத்தி வைத்தார்.இந்த முடிவை, கட்சித் தலைமையிடம் ஆலோசிக்காமல் எடுத்த காரணத்தால், ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றொரு தலைவரும், முன்னாள் பிரதமருமான புஷ்ப கமல் தாஹல் பிரசந்தா உட்பட, நிலைக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர், சர்மா ஒலிக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள் ளனர்.இது மட்டுமல்லாமல், பிரதமர் சர்மா ஒலி, சீனாவுடன் வைத்துள்ள ரகசிய உறவு காரணமாக, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும், அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.எனவே, சர்மா ஒலி, பிரதமர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இப்பிரச்னைக்கு தீர்வு காண, கட்சியின் செயல் தலைவர் பிரசந்தாவுடன், பிரதமர் ஒலி, பேச்சு நடத்தி வருகிறார்.

கடந்த ஒரு வாரத்தில், ஐந்துக்கும் மேற்பட்ட முறை, இவர்கள் இருவரும் சந்தித்துள்ளனர். எனினும், எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை என தகவல் கிடைத்துள்ளது.நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழு கூட்டம், நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்தது. பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்பதால், இந்த நிலைக்குழு கூட்டம், இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இன்று நடைபெறும் நிலைக்குழு கூட்டத்தில், பிரதமர் ஒலியின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என, அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X