சீன நிறுவனமல்ல: மறுக்கும், ஜூம் | Zoom may take legal action against JioMeet for copying UI | Dinamalar

பொது செய்தி

இந்தியா

சீன நிறுவனமல்ல: மறுக்கும், 'ஜூம்'

Updated : ஜூலை 10, 2020 | Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (15)
Share
புதுடில்லி: 'நான் அவனில்லை' கதையாக, இப்போது பல நிறுவனங்கள், தாங்கள் சீன நிறுவனமல்ல என, அவசர அவசரமாக மறுத்து வருகின்றன. சமீபத்தில் இந்த பட்டியலில் சேர்ந்திருப்பது, வீடியோ அழைப்புக்கான, 'ஜூம்' செயலி. 'நாங்கள் சீன நிறுவனமல்ல; அமெரிக்க நிறுவனம்' என மறுத்துள்ளது, இந்நிறுவனம்.இது குறித்து, 'ஜூம் வீடியோ கம்யூனிகேஷன்ஸ்' நிறுவனத்தின் இந்தியாவுக்கான தலைவர் சமீர் ராஜே
ZOOM, jio meet, China, US, Zoom app

புதுடில்லி: 'நான் அவனில்லை' கதையாக, இப்போது பல நிறுவனங்கள், தாங்கள் சீன நிறுவனமல்ல என, அவசர அவசரமாக மறுத்து வருகின்றன. சமீபத்தில் இந்த பட்டியலில் சேர்ந்திருப்பது, வீடியோ அழைப்புக்கான, 'ஜூம்' செயலி. 'நாங்கள் சீன நிறுவனமல்ல; அமெரிக்க நிறுவனம்' என மறுத்துள்ளது, இந்நிறுவனம்.

இது குறித்து, 'ஜூம் வீடியோ கம்யூனிகேஷன்ஸ்' நிறுவனத்தின் இந்தியாவுக்கான தலைவர் சமீர் ராஜே கூறியதாவது: 'ஜூம்' நிறுவனம், சீனாவை சேர்ந்தது கிடையாது. இது ஓர் அமெரிக்க நிறுவனம். எங்களது தரவுகள், இந்தியாவுக்கு வெளியே சேமிக்கப்படவில்லை என்பது குறித்து அரசுக்கு விளக்கி இருக்கிறோம்.


latest tamil news'ஜியோ மீட்' செயலி எங்களை காப்பி அடித்தது போலவே இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. அதன் மீது வழக்கு தொடர்வது குறித்து, நிறுவனத்தின் சட்டப் பிரிவுதான் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X