பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவை வென்றவர்கள் சென்னையில் 68 சதவீதம் பேர்

Updated : ஜூலை 10, 2020 | Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
chennai news, tamil news, tamil nadu news, tn news, chennai coronavirus, coronavirus

ராயபுரம்:சென்னையில், அனைத்து மண்டலங்களிலும், தொற்று பாதிக்கப்பட்டவர்களில், 60 சதவீதத்திற்கும் மேல் குணமடைந்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியில், ஏப்., முதல் வாரம் முதல், பரவலாக தொற்று கண்டறியப்படுகின்றன. நேற்றுடன், 72 ஆயிரத்து, 500 பேர் தொற்றுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது

இதில், 49 ஆயிரத்து, 587 பேர் குணமடைந்தனர். இது, 68 சதவீதமாகும். தவிர, 21 ஆயிரத்து, 766 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும், 1,146 பேர் இறந்துள்ளனர் தொற்று பாதிப்பில் இருந்து, சென்னை மாநகராட்சி, மின்னல் வேகத்தில் மீண்டு வருகிறது. அனைத்து மண்டலங்களிலும், தொற்று பாதிக்கப்பட்டவர்களில், 60 சதவீதத்திற்கு மேல் குணமடைந்து உள்ளனர்


latest tamil news



முதல் மண்டலமான திருவொற்றியூரில், நேற்றுடன், 2,845 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 1,801 பேர் குணமடைந்துள்ளனர். இது, 63 சதவீதமாகும். தவிர, 974 பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர். உயிரிழப்பு, 65 ஆக உள்ளது

மணலியில், 1,313 பேரில், 869 பேர் குணமடைந்த நிலையில், சதவீதம், 66 ஆக உள்ளது. தவிர, 429 பேர் மட்டுமே சிகிச்சை பெறும் நிலையில், உயிரிழப்பு, 15 ஆக உள்ளது.

தொற்று பாதிப்பில், ருத்ர தாண்டவமாடிய ராயபுரத்தில், 9,242 பேரில், 7,340 பேர் குணமடைந்த நிலையில், சதவீதம், 79 ஆகவும், மாநகராட்சியில் முதலிடமாகவும் உள்ளது. தவிர, 19 சதவீதமான, 1,741 பேர் மட்டுமே சிகிச்சை பெறும் நிலையில், உயிரிழப்பு, 161 ஆக உள்ளது

மற்றொரு, முக்கியத்துவம் வாய்ந்த மண்டலமான தண்டையார்பேட்டையில், தொற்று பாதித்த, 7,903 பேரில், 6,149 பேர் குணமடைந்து, சதவீதம், 77ஆக உள்ளது. தவிர, 20 சதவீதமான, 1,628 பேர் மட்டுமே, சிகிச்சை பெறும் நிலையில், 166 பேர் இறந்துள்ளனர்

தேனாம்பேட்டையில், 72; வளசரவாக்கம், சோழிங்கநல்லுாரில் தலா, 69; அண்ணாநகர், திரு.வி.க.நகர், அடையாறில், தலா, 68; கோடம்பாக்கம், மாதவரத்தில், 65; அம்பத்துாரில், 61 சதவீதம் பேர் என, 13 மண்டலங்களில், தொற்று பாதிக்கப்பட்டவர்களில், 60 சதவீதத்திற்கும் மேல் குணமடைந்து உள்ளனர்

குறைந்தபட்சமாக, ஆலந்துாரில், 58, பெருங்குடியில், 57 சதவீதம் பேர் குணமடைந்த நிலையில், விரைவில் இந்த மண்ட லங்களும், 60 சதவீதத்தை கடக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
11-ஜூலை-202008:05:59 IST Report Abuse
Sampath Kumar எவனுகளாக வென்று விட்டார்களா ??/ வெல்ல வைத்தவர்கள் யார் ? எது
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
10-ஜூலை-202013:53:28 IST Report Abuse
Bhaskaran முதலில் அலட்சியம் காட்டி எகத்தாளம் பேசிய மக்கள் பிறகு மரணங்களைக்கண்டு அதிர்ந்துபோய் சர்வநாடியும் ஒடுங்கி வீட்டில் அடைந்து கிடந்தும் வெளியில் .வந்தால் முகக்கவசம் அணிந்தும் கபாசுரக்குடிநீர் .ஆர்சனிக் album மாத்திரை .சித்தரத்தைத்துணையுடனும் எதிர்ப்புசக்தி அதிகரிக்க செய்துகொண்டும் அரசுக்கு ஒத்துழைப்பு தந்தாலும் இந்த முன்னேற்றம் .இதையே மதுரை மக்களும் பின்பற்றனும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X