ஆக., 6 வரை நிரவ் மோடியின் காவல் நீட்டிப்பு

Updated : ஜூலை 10, 2020 | Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

லண்டன்:ரூ.13 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடியில் கைதாகி சிறையில் உள்ள குற்றவாளி நிரவ் மோடியின் காவலை ஆகஸ்ட் 6-ம் தேதி வரை நீட்டித்து லண்டன் கோர்ட் உத்தரவிட்டது.



latest tamil news



மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி (49), தனது உறவினர் மெகுல் சோக்சியுடன் சேர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன்பெற்று வெளிநாட்டுக்கு தப்பி ஓடினர்.லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடி கடந்த மார்ச் மாதம் ஸ்காட்லாந்து யார்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது கைதிகள் நெருக்கடி மிகுந்த வாண்ட்ஸ் வோர்த் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.


latest tamil news



நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடுகடத்துவது தொடர்பான வழக்கு லண்டன் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அப்போது அவர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.அந்த மனுவை விசாரித்த வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு வெஸ்ட்மின்ஸ்ட்டர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வீடியோ கான்பரன்சில் நிரவ் மோடி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, நிரவ் மோடியின் சிறைக்காவலை ஆகஸ்ட் 6 வரை நீட்டித்து உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T.B.Sathiyanarayananan - Madurai.,இந்தியா
10-ஜூலை-202010:23:04 IST Report Abuse
T.B.Sathiyanarayananan I request all the Banks to take immediate action to recover the money from him.If we are late then will route some more NPAs. To bring fear to all the NPA borrowers, we have take steps immediately.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X