2021ல் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து: அமெரிக்க மூத்த டாக்டர் நம்பிக்கை

Updated : ஜூலை 10, 2020 | Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

நியூயார்க்; “கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து, 2021ம் ஆண்டின் துவக்கத்தில், தயாரிக்கப்பட்டுவிடும்,” என, அமெரிக்க தேசிய தொற்று நோய் மையத்தின் இயக்குனர், டாக்டர் அந்தோனி பாசி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.



latest tamil news



கொரோனா வைரசால், மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில், வைரசுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இது குறித்து, அமெரிக்க தேசிய தொற்று நோய் மையத்தின் இயக்குனரான, டாக்டர் அந்தோனி பாசி நேற்று கூறியதாவது:கொரோனா வைரஸ், தொடர்ந்து பரவும். பொது சுகாதார நடவடிக்கைகள் மூலமே, அந்த வைரசை, நம்மால் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

எதிர்காலத்தில் வரும் தொற்று நோய்களைச் சமாளிக்க, உலகளாவிய ஒத்துழைப்பும், வெளிப்படைத்தன்மையும் மிகவும் முக்கியமாகும்.கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியில், ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மொத்தமாக, 57 தடுப்பு மருந்துகள், ஆய்வகத்தில் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.சில தடுப்பு மருந்துகள், அந்த கட்டத்தை வெற்றிகரமாக கடந்துள்ளன. அவற்றை வைத்து, இம்மாத இறுதியில் அடுத்தகட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.


latest tamil news



குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், 'மாடர்னா' நிறுவன ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள, ஒரு தடுப்பு மருந்தின் பரிசோதனை, நல்ல முடிவுகளை அளித்துள்ளது. அது, இம்மாத இறுதியில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். இந்த தடுப்பு மருந்தின் மீது, எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. எனினும், நம்மால் எதையும் தீர்மானிக்க முடியாது. அந்த தடுப்பு மருந்து, பாதுகாப்பாகவும், பயனுள்ளதாகவும் இருக்குமா என்பதை நம்மால் யூகிக்க முடியாது. இறுதிகட்ட பரிசோதனைக்குப் பின்னரே, நம்மால் எதையும் கூற முடியும்.

இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது, 2021ம் ஆண்டின் துவக்கத்திலோ, கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிடும் என, நான் முழுமையாக நம்புகிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
10-ஜூலை-202016:04:57 IST Report Abuse
Sanny அதுவரை சாக விரும்புறவங்க சாகலாம். இப்படிக்கு டொனால் டிரம்ப். லொள்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
10-ஜூலை-202009:01:47 IST Report Abuse
Mani . V அட போங்கய்யா, எங்க ஆளுங்க மருந்து கண்டு பிடித்து ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடப்போகிறார்கள். ஹா...., ஹா. ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X