பொது செய்தி

இந்தியா

ஜனாதிபதி மாளிகையில் தினமும் கபசுர குடிநீர்: டில்லி மக்களிடையே 'சித்தா'வுக்கு திடீர் மவுசு

Updated : ஜூலை 10, 2020 | Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

புதுடில்லி: ஜனாதிபதி மாளிகை மற்றும் தமிழர்கள் அதிகம் வசிக்கும், டில்லியின் முக்கிய பகுதிகளில், தமிழகத்தின் சித்த மருத்துவ கஷாயமான, கபசுர குடிநீர் பிரபலமாகி வருகிறது.latest tamil newsஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர், அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள், தோட்டக்காரர்கள், சமையல்காரர்கள் என, ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர்.இவர்களுக்காக, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலத்தில் அமைக்கப்பட்டது தான், 'ஆயுஷ் வெல்னஸ்' கிளினிக். இதிலிருக்கும், 10 பேர் கொண்ட சித்த மருத்துவப் பிரிவு, கபசுர குடிநீரை, ஜனாதிபதி குடும்பத்தினர் மத்தியில் மட்டுமல்லாது, அந்த மாளிகை முழுதும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து, இக்குழுவின் தலைவரான சித்த மருத்துவர் இளவரசன் கூறியதாவது:தினமும், 4 முதல், 5 லிட்டர் கபசுர குடிநீர் தயாரிக்கப்படுகிறது. இதை, ஜனாதிபதி மாளிகையில் உள்ள அனைவரும், காலையில் பருகிய பிறகே, பணிகளுக்குச் செல்கின்றனர். உரிய அனுமதி பெற்று, டில்லியின் முக்கிய இடங்களிலும், தினந்தோறும் கபசுர குடிநீரை வினியோகம் செய்து வருகிறோம். இதற்கு, அடித்தட்டு மக்களிடையே பெரிய வரவேற்பு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.இதற்கிடையில், தமிழகத்தில் பிரபலமாகியுள்ள சித்த மருத்துவத்தின் பயன்பாட்டை, தலைநகர் டில்லியிலும் விரிவுபடுத்த முடியுமா என்ற ஆலோசனையில், மத்திய அரசு இறங்கியுள்ளது.

இதன் முதற்கட்டமாக, மத்திய சுகாதாரத் துறை, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் ஆயுஷ் ஆகியவை ஒருங்கிணைந்து, கபசுர குடிநீரை உள்ளடக்கிய சித்த மருத்துவ வழிமுறைகளை, முறைப்படி அறிவித்துள்ளன.ஜப்தர்ஜங் பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள, சித்த மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், டில்லி பொதுமக்கள் மத்தியில், கபசுர குடிநீரை கொண்டு சேர்க்கும் பணியில் இறக்கி விடப்பட்டுஉள்ளனர்.


latest tamil newsஇது குறித்து, இப்பிரிவின் பொறுப்பாளரான மருத்துவர் மாணிக்கவாசகம் கூறியதாவது:திகார் சிறை காவலர்கள், தமிழ்நாடு இல்ல ஊழியர்களின் குடும்பத்தினர் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு, கபசுர குடிநீரை வழங்கினோம். அதோடு, தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் வினியோகித்து வருகிறோம். இதன் பலனை கேள்விப்படும் வட மாநில மக்களும், ஆர்வமாக வாங்கிக் குடிக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

-நமது டில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10-ஜூலை-202022:52:19 IST Report Abuse
Ramki இந்த தரங்கெட்ட தணிகாசலம், சரியான டுபாக்கூர் பேர்வழி.சீன தூதுவர் இவரை அழைத்து கொரோனாவிற்கு இவரிடம் மருந்து வாங்கி சீனாவிற்கே அனுப்பி இவர் மூலம் ஆயிரக்கணக்கான கொரோனா பாதித்தோர் காப்பாற்றப்பட்டதாக கூறி,அதனால் இவரைத்தேடி ,பிரதமர் மோடி தன்னை அழைத்து கௌரவித்தால் நல்ல விளம்பரமாகுமென நினைத்து பொய்யான தகவலைத்தந்து நுணலும் தன் வாயால் கெடும் எனும் கூற்றிற்கிணங்க காவல் துறையால் கைதாகி உள்ளே சென்றவன்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
10-ஜூலை-202010:11:19 IST Report Abuse
Lion Drsekar ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர், அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள், தோட்டக்காரர்கள், சமையல்காரர்கள் என, ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர்" இவர்கள் அனைவருக்கும் அப்படி அங்கு என வேலை இருக்கிறது? சற்று சிந்திக்கவேண்டும், சித்த மருந்து கொடுத்து காப்பாற்றப்படுகிறார்கள் பாராட்டுக்கள், வந்தே மாதரம்
Rate this:
Cancel
svs - yaadum oore,இந்தியா
10-ஜூலை-202006:38:31 IST Report Abuse
svs //...சித்த மருத்துவர் இளவரசன் கூறியதாவது:தினமும், ..... உரிய அனுமதி பெற்று,.....///......சித்த வைத்தியம் பாரம்பரிய வைத்தியம் ....பல பேர் பத்திரிகையில் மூலிகையின் மகத்துவம் பற்றி எழுதுகிறார்கள்...இவர்கள் யாருமே காரோண குணப்படுத்திடுவேன் என்று சொல்லவில்லை..அப்படி சொல்வதும் ஆபத்து ....சித்த வைத்தியத்திற்கு ஆதரவு என்ற பெயரில் போலி டாக்டர் தணிகாச்சலத்திற்கு ஆதரவு எதற்கு என்று புரியவில்லை ....தணிகாசலம் பாரம்பரிய வைத்தியர் என்றால் அது போல் பல பேர் மூலிகை பற்றி தெரிந்தவர் உள்ளார்கள் .பத்திரிகையிலும் நிறைய எழுதுகிறார்கள் ......இந்த செய்தியிலும் உரிய அனுமதி பெற்று, டெல்லியில் கபசுர குடிநீரை வினியோகம் என்றுதான் உள்ளது ..இந்த தணிகாசலம் ஆட்டிசம் குணப்படுத்துவேன் என்று கூடத்தான் விளம்பரம் ..எந்த உண்மையான சித்த வைத்தியரும் விளம்பரம் தேட மாட்டார்கள் ..கூறுவது உண்மையென்றால் இந்த செய்தியில் உள்ளதுபோல் அனுமதி பெற்று நிரூபணம் செய்யலாமே ....பாரம்பரிய வைத்தியத்திற்கு இழுக்கு தேடுவது இந்த இந்த தணிகாசலம் போன்றோர்தான்
Rate this:
v.santhanakrishnan - tirupur,இந்தியா
10-ஜூலை-202019:45:19 IST Report Abuse
v.santhanakrishnanmudalil govt. siddha medicine test panna readyaga irukanumae....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X