பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.1000 வாங்க இன்று கடைசி நாள்; பொருட்கள் வினியோகம் துவக்கம்

Updated : ஜூலை 10, 2020 | Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

சென்னை : முழு ஊரடங்கு அமலான பகுதிகளில் அரசு அறிவித்த 1000 ரூபாய் நிவாரணத்தை வாங்காதவர்கள் ரேஷன் கடைகளில் அதை வாங்குவதற்கான அவகாசம் இன்றுடன்(ஜூலை 10) முடிகிறது. அத்துடன் இம்மாதத்திற்கான இலவச பொருட்கள் வினியோகமும் இன்று துவங்குகிறது.



latest tamil news


தமிழக ரேஷன் கடைகளில் ஏப்ரல் முதல் ஜூன் வரை வழங்கியது போல இம்மாதமும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில், சர்க்கரை போன்றவை இலவசமாக வழங்கப்பட உள்ளன.கார்டுதாரர்கள் கூட்டமாக வருவதை தடுக்க எந்த தேதி, நேரத்திற்கு வர வேண்டும் என குறிப் பிடப்பட்ட 'டோக்கன்' கள் அவர்களின் வீடுகளில் இம்மாதம் 6ம் தேதி முதல் நேற்று வரை வழங்கப்பட்டன.

இன்று முதல் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் துவங்குகிறது. இதற்காகவே கடைகளுக்கு இன்று வார விடுமுறையாக இருந்தாலும் அவை வழக்கம் போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் மதுரையில் சில இடங்களில் ஜூன் இறுதியில் முழு ஊரடங்கு அமலானதால் அந்த பகுதிகளில் வசிக்கும் 27.22 லட்சம் அரிசி கார்டுதாரர்களுக்கு தலா 1000 நிவாரணம் வழங்க அரசு உத்தரவிட்டது. நிவாரண தொகை கார்டுதாரர்களின் வீடுகளில் வழங்கும் பணி ஜூன் 30ல் முடிந்த நிலையில் 1.53 லட்சம் பேர் வாங்கவில்லை.

இதையடுத்து நிவாரணம் வாங்காதவர்கள் இம்மாதம் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை ரேஷன் கடைகளில் வாங்கி கொள்ள உணவு துறை அவகாசம் வழங்கியது. அந்த அவகாசம் இன்றுடன் முடிகிறது.முகக் கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே ரேஷன் பொருட்களை வழங்குமாறு கடை ஊழியர்களை கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
11-ஜூலை-202008:04:34 IST Report Abuse
Sampath Kumar நல்ல காட்டுறாங்கடா பிலிம்
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
10-ஜூலை-202018:01:41 IST Report Abuse
Balasubramanian Ramanathan நடுவுல ஒரு மூனு மாசம் தான். அப்புறம் பாருங்க தமிழ்நாட்டில் பணம் கொட்டோ கொட்டுது கொண்டாடும். இது தமிழ் நாடய்யா, தெரிஞ்சிக்கோ
Rate this:
Cancel
10-ஜூலை-202014:56:59 IST Report Abuse
Saai Sundharamurthy A.V.K அவர்கள் எல்லாம் ஏற்கனவே ஊரை காலி செய்து விட்டு போய் விட்டனர் என்று அர்த்தம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X