கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சாத்தான்குளம் மரணம்: சி.பி.ஐ., விசாரணை இன்று துவக்கம்

Updated : ஜூலை 10, 2020 | Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
Sathankulam case, Sathankulam custodial death, Tuticorin custodial death, Central Bureau of Investigation, custodial deaths


மதுரை, :துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்குதலில் தந்தை ஜெயராஜ் 63, மகன் பென்னிக்ஸ் 31, கொல்லப்பட்ட சம்பவம் குறித்து இன்று சி.பி.ஐ., விசாரணையை துவக்குவதாக, மத்திய அரசுத் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் தாக்குதலில் சாத்தான்குளம் ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் இறந்தது குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு தானாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரிக்கிறது. ஜூன் 30ல் தமிழக அரசு தரப்பில், வழக்கு விசாரணை சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது குறித்த அரசாணை சமர்ப்பிக்கப்பட்டது.


latest tamil news
நேற்று நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு காணொலியில் விசாரித்தது.தமிழக அரசுத் தரப்பில், 'சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி.,போலீசார் 10 பேரை கைது செய்துள்ளனர். கொலை வழக்காக மாற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. கைதானவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, கீழமை நீதிமன்றத்தில் மனு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசுத் தரப்பில்,'சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., வழக்குப் பதிந்துள்ளது. சி.பி.ஐ., கூடுதல் எஸ்.பி., சுக்லா தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை டில்லியிலிருந்து இன்று (ஜூலை 10) தமிழகம் வந்து விசாரணையை துவக்குகிறது,'என தெரிவிக்கப்பட்டது.தமிழக அரசு தரப்பில், 'சி.பி.ஐ.,விசாரணைக்குத் தேவையான உதவிகள் செய்யத் தயார்,' என தெரிவிக்கப்பட்டது.

நீதிபதிகள்: சி.பி.சி.ஐ.டி., சேகரித்த ஆதாரங்கள், ஆவணங்களை சி.பி.ஐ.,பயன்படுத்திக் கொள்ளலாம். கைதானவர்களில், அவசியம் கருதி தேவையானவர்களை மட்டும் உரிய காலத்திற்குள் போலீஸ் காவலில் எடுக்க சி.பி.ஐ., அல்லது சி.பி.சி.ஐ.டி.,நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வழக்கில் சி.பி.ஐ., மற்றும் சி.பி.சி.ஐ.டி.,போலீசார் எதிர்மனுதாரர்களாக இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். விசாரணையின் தற்போதைய நிலை குறித்து சி.பி.சி.ஐ.டி.,தரப்பில் 'சீல்' இட்ட உறையில் வைத்து ஜூலை 28ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்றனர்.இன்று வருகைசாத்தான்குளம் கொலை வழக்கை விசாரிக்க மதுரை வரும் சி.பி.ஐ., குழு ஜவஹர்புரத்தில் உள்ள அலுவலகத்தில் ஆலோசனை நடத்துகிறது. பிறகு சாத்தான்குளம் செல்ல உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
யார்மனிதன் - Toronto,கனடா
10-ஜூலை-202021:38:59 IST Report Abuse
யார்மனிதன் இன்னும் ஒரு 60 வருசத்துக்குள்ள இந்த வழக்கை முடித்துவிடுவார்கள். நம்ம முன்னாள் முதல்வர் எப்படி செத்தார்ன்னு கண்டுபிடிக்க போட்ட கமிஷன் என்னாச்சு ???
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
10-ஜூலை-202012:20:31 IST Report Abuse
Chandramoulli ஆகா ? அருமை. உண்மையான குற்றவாளிகள் மற்றும் அதன் பின்புலம் மூலம் செயல்பட்டவர் எல்லோரும் தண்டிக்க பட வேண்டும். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் இப்போது நிரூபணம் ஆக போகிறது. ரொம்ப சந்தோசம்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
10-ஜூலை-202012:19:16 IST Report Abuse
sankaseshan கனி அக்காவையும் வறுத்தெடுங்கள் முல காரணமே அக்காதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X