ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை

Updated : ஜூலை 10, 2020 | Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (116)
Share
Advertisement
ரவுடி, விகாஸ்துபே, என்கவுன்டர், சுட்டுக்கொலை

கான்பூர்: உ.பி.,யின் கான்பூரில், போலீஸ் டி.எஸ்.பி., உள்ளிட்ட எட்டு பேர் கொல்லப்பட்ட வழக்கில் ம.பி.,யில் பதுங்கியிருந்த ரவுடி விகாஸ் துபே கைது செய்யப்பட்டு, கான்பூருக்கு அழைத்து செல்லும் வகையில் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கான்பூரை அடுத்த பிக்ரு கிராமத்தில் கடந்த 3-ம் தேதி தங்களை பிடிக்க வந்த போலீசாரை தடுத்து நிறுத்தி சினிமா பாணியில் இயந்திர துப்பாக்கிகளை வைத்து ரவுடி விகாஸ் துபே தலமையிலான கும்பல் சுட்டது. இதில் ஒரு போலீஸ் டி.எஸ்.பி., மூன்று எஸ்.ஐ.,க்கள் உள்ளிட்ட எட்டு போலீசார் உயிரிழந்தனர். இந்தியாவையே அதிரச் செய்த இந்த படுகொலையில் முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே தலைமறைவானான். இதற்கிடையே அவனது கூட்டாளிகள் 5 பேரை போலீசார் சுட்டுக்கொன்றனர். சிலரை கைது செய்தனர்.


latest tamil news



விகாஸ் துபேவுக்கு தகவல் அளித்து வந்த எஸ்.ஐ.,க்கள் இருவரையும் புதனன்று கைது செய்தனர். 40 தனிப்படை போலீசார் டில்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய இடங்களில் தனி தனிப் பிரிவாக சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று (ஜூலை 09) காலை மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் கைது செய்யப்பட்டார். அவரை கான்பூருக்கு அழைத்து வரும்வழியில் மழை பெய்ததால், சிக்கல் நீடித்தது.


latest tamil news



இதற்கிடையே விகாஸ் துபேவை அழைத்து வரும்போது பாதுகாப்பு பணிக்கு வந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தை பயன்படுத்தி தப்பிக்க முயன்ற விகாஸ் துபேவை என்கவுன்டரில் போலீஸ் சுட்டுக்கொன்றதாக போலீசார் தெரிவித்தனர். விபத்தின் போது போலீசாரிடம் இருந்து துப்பாக்கியை பறித்து தப்பிக்க முயன்றதாகவும் அதனால் என்கவுன்டர் செய்ததாகவும் கான்பூர் ஐ.ஜி., கூறினார். காரில் இருந்த 4 போலீசார் காயமடைந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


latest tamil news


என்கவுன்டர் குறித்து மேற்கு கான்பூர் எஸ்.பி., கூறுகையில், ‛கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதும், காயமடைந்த போலீஸ்காரர்களின் கைத்துப்பாக்கியைப் பறித்துக் கொண்டு விகாஸ் துபே தப்பிச் செல்ல முயன்றான். அவரை சரணடையச் செய்ய போலீசார் முயன்றனர். அப்போது போலீஸ்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால், போலீசார் பதிலுக்கு சுட்டனர்,' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (116)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravi - Chennai,இந்தியா
15-ஜூலை-202015:49:50 IST Report Abuse
Ravi காங்கிரஸ் இன்று முதிர்ச்சி இல்லாத ராகுலிடம் சிக்கி தவிக்கிறது , காங்கிரஸில் இருந்து குட்டை குழப்பி கொண்டு வெளியே வரமுடியாத சேத்தில் மாட்டிக்கொண்டு திருட்டு முழி முழிக்கிறாரார்கள் .
Rate this:
Cancel
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
11-ஜூலை-202000:36:34 IST Report Abuse
naadodi "இந்நிலையில் நேற்று (ஜூலை 09) காலை மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் கைது செய்யப்பட்டார். அவரை கான்பூருக்கு அழைத்து வரும்வழியில் மழை பெய்ததால், சிக்கல் நீடித்தது."-அது என்ன அவர், இவர் என்று ஏக மரியாதை
Rate this:
Cancel
balakrishnan - Mangaf,குவைத்
10-ஜூலை-202022:46:41 IST Report Abuse
balakrishnan very good news.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X