இதுதான் நாம் கனவு கண்ட இந்தியாவா?; ராகுல் கேள்வி

Updated : ஜூலை 10, 2020 | Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (83)
Share
Advertisement
Rahul, rahul gandhi, Congress, Uttar Pradesh, Chitrakoot horror, rape case, crime news, ராகுல், கனவு, இந்தியா, உபி, சிறுமியர்

புதுடில்லி: உ.பி., மாநிலம் சித்ரகூட்டில், சிறுமியர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானதை சுட்டிக்காட்டிய காங்., எம்பி., ராகுல், இதுதான், நாம் கனவு கண்ட இந்தியாவா? என கேள்வியெழுப்பியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் அமைந்துள்ள சித்ரகூட் பகுதியில் அனுமதியின்றி நூற்றுக்கணக்கான சுரங்கங்கள் செயல்பட்டு வருகிறது. அங்கு பழங்குடியினத்தைச் சேர்ந்த ஏராளமானோர் மிகக் குறைந்த கூலிக்கு வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சுரங்கங்களில் பணிபுரியும் 15 வயதுக்கும் குறைவான சிறுமிகள், பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. சுரங்கங்களின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமான பலர், இந்த செயலில் ஈடுபட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இந்த செய்தியை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த காங்., எம்பி ராகுல், மேலும் பதிவிட்டுள்ளதாவது: கொரோனா பரவலை தடுக்க, திட்டமிடாமல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், கோடிக்கணக்கான ஏழை குடும்பங்கள், பட்டினியில் சிக்கி தவிக்கின்றன. உ.பி., மாநிலம் சித்ரகூட்டில், சிறுமியர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி உள்ளனர். இது தான், நாம் கனவு கண்ட இந்தியாவா?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
24-ஜூலை-202004:39:10 IST Report Abuse
NicoleThomson என்னவோ போங்க நீங்க இந்தியருக்கு வழிவிடுங்க
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
13-ஜூலை-202016:38:26 IST Report Abuse
madhavan rajan இவர் பாராளுமன்றத்தில் தூங்கும்போது என்ன கனவு கண்டார் என்று சொல்லவேயில்லையே. எழுந்தவுடன் எதோ நினைவில் பிரதமரை கட்டிப்பிடித்து பிறகு தன கட்சிக்காரர்களை பார்த்து கண்ணடித்ததோடு சரி.
Rate this:
Cancel
Gandhi - Chennai,இந்தியா
13-ஜூலை-202013:24:32 IST Report Abuse
Gandhi கனவில் இருந்து வெளியே வாங்க. ராஜஸ்தானிலும் நம்ம கடையை மூடப்போறாங்களாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X