அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா உறுதி

Updated : ஜூலை 10, 2020 | Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
Minister, Sellur K Raju, Corona Positive, TESTS POSITIVE, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu, chennai, அமைச்சர், செல்லூர் ராஜூ, கொரோனா, பாதிப்பு, உறுதி

சென்னை: தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றால், எதிர்கட்சி மற்றும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் என அரசியல்வாதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், கொரோனா பாதிப்புக்குள்ளாகி, தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார். ஸ்ரீ பெரும்புதுார் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பழனி, ரிஷிவந்தியம் தி.மு.க., எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர். உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ., குமரகுரு, பரமக்குடி எம்.எல்.ஏ., சதன் பிரபாகர், செய்யூர் எம்.எல்.ஏ., அரசு, செஞ்சி எம்.எல்.ஏ.,மஸ்தான் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


latest tamil news



அதேபோல், முன்னாள் அமைச்சர் வளர்மதி, மின் துறை அமைச்சர் தங்கமணி, அவரது மகன் தரணிதரன் ஆகியோருக்கு, நோய் தொற்று உறுதியானது. இருவரும் சிகிச்சைக்காக, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சமீபத்தில் ராஜூவின் மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.S.KRISHNAMURTHI - chennai,இந்தியா
10-ஜூலை-202020:10:54 IST Report Abuse
G.S.KRISHNAMURTHI நல்லபடியாக குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
Rate this:
Cancel
Sethuraman Iyer - mayiladuthurai,இந்தியா
10-ஜூலை-202019:30:28 IST Report Abuse
Sethuraman Iyer நல்ல படியாக குணமடைய வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
10-ஜூலை-202018:43:25 IST Report Abuse
ஸாயிப்ரியா நல்ல படியாக குணமடைய வாழ்த்துக்கள் சார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X