ஆசியாவின் மிகப்பெரிய சூரியமின்சக்தி திட்டம்: துவக்கி வைத்தார் பிரதமர்| PM Modi inaugurates Asia's largest solar power plant in MP | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆசியாவின் மிகப்பெரிய சூரியமின்சக்தி திட்டம்: துவக்கி வைத்தார் பிரதமர்

Updated : ஜூலை 10, 2020 | Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (14)
Share
ஆசியா,மின்சக்தி திட்டம், சோலார் திட்டம், மத்திய பிரதேசம், மபி,ரேவா, PM Modi, narendra modi, inaugurate, Asia's largest, solar power plant, MP, madhya pradesh, india

புதுடில்லி: ம.பி.,யில் அமைக்கப்பட்ட ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டத்தை துவக்கி வைத்த பிரதமர் மோடி, சூரிய மின்தகடுகள், பேட்டரிகளுக்காக வெளிநாடுகளை சார்ந்துள்ளதை குறைக்க வேண்டும் என தெரிவித்தார்.

ம.பி., மாநிலத்தில் ரேவா என்ற இடத்தில் 1,500 ஹெக்டேரில் 750 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி திட்டம் அமைக்கப்பட்டது. இது ஆண்டுதோறும் வெளியேற்றும், 15 லட்சம் டன் கார்பன் டை ஆக்சைட் வெளியேற்றத்தை குறைக்கும் என அரசு தெரிவித்துள்ளது.


latest tamil news


இந்த சூரிய மின்சக்தி திட்டத்தை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: ரேவாவில் வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது. அன்னை நர்மதா மற்றும் வெள்ளைப்புளியின் அடையாளத்தை கொண்டு ரேவா நகரம் அறியப்பட்டது. தற்போது, ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டமும், அதன் அடையாளங்களில் ஒன்றாக மாறியுள்ளது. அமைக்கப்பட்ட சூரிய மின்சக்தி திட்டம் இங்குள்ள தொழிற்சாலைகளுக்கு பயன்படும். டில்லி மெட்ரோ ரயிலும் பலனடையும். அதனை தவிர்த்து, ஷனாபுர், நீமூச், சதார்பூர் ஆகிய இடங்களில் சூரிய மின்சக்தி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. சுத்தமான, பாதுகாப்பானது என்பதால், 21ம் நூற்றாண்டிற்கான தேவையாக சூரியமின்சக்தி உள்ளது.

சூரிய தகடுகள், அதனுடன் தொடர்புடைய சாதனங்களுக்கு பிற நாடுகளை சார்ந்திருப்பதை நாம் குறைப்பதற்கான பணிகளை துவக்க வேண்டும். சோலார் உபகரணங்கள் மற்றும் பேட்டரிகள் இந்தியாவில் தயாரிப்பதற்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும். நாட்டின் வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில் மின்சார தேவையும் அதிகரித்து வருகிறது. மின்சாரதேவையில் இந்தியா தன்னிறைவு பெறும் இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X