பொது செய்தி

தமிழ்நாடு

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கலாம்: தமிழக அரசு உத்தரவு

Updated : ஜூலை 10, 2020 | Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
பொருளாதாரம், சான்றிதழ், பின்தங்கியவர்கள், தமிழக அரசு

சென்னை: பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு, நிறுத்திவைக்கப்பட்ட சான்றிதழை, வழங்குமாறு, மாவட்ட கலெக்டர்களுக்கு, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்க 10 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கி உள்ளது. இதனால், மத்திய அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டு பிரிவில் வராத, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்நிலையில், கடந்த ஜூன் 4 ல், வருவாய் நிர்வாக ஆணையர் ,அனைத்து கலெக்டர்களுக்கும் , பிறப்பித்த உத்தரவில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வருமானம் மற்றும் சொத்து சான்றிதழ் அளிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மேலும் மாவட்ட கலெக்டர்களிடமும் மனு அளிக்கப்பட்டது. அரசாணையை திரும்ப பெறப்பட்டு, சான்றிதழ் வழங்க வேண்டும் என அந்தணர் முன்னேற்ற கழகம் வலியுறுத்தியது.


latest tamil news



இந்நிலையில், பொருளாதாரத்தில், பின்தங்கியவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட வருமானம் மற்றும் சொத்து சான்றிதழை வழங்கலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான உத்தரவை, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், வருவாய்த்துறை ஆணையர் பணிந்திர ரெட்டி சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
10-ஜூலை-202020:15:53 IST Report Abuse
Bhaskaran வீரமணி கும்பல் இதை எதிர்த்து போர் தொடுப்பார்கள்
Rate this:
Cancel
G.S.KRISHNAMURTHI - chennai,இந்தியா
10-ஜூலை-202019:54:14 IST Report Abuse
G.S.KRISHNAMURTHI முன்னேறிய வகுப்புலதான் ஏழைகள் நிறைய இருக்காங்க அவர்கள் நன்றாக இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
Rate this:
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
11-ஜூலை-202006:57:04 IST Report Abuse
அம்பி ஐயர்அறிவுல மட்டும் முன்னேறிய குரூப்.... நாங்க.... வேற எதுலயும் முன்னேறலை..... ஆனால் அவுங்க..... அறிவைத் தவிர்த்து...... மற்ற எல்லாத்துலயும் முன்னேறிட்டாங்க..... ஆனால் பேரு மட்டும் பின்தங்கிய வகுப்பு..... என்ன கொடுமை இது..........
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
10-ஜூலை-202019:31:06 IST Report Abuse
GMM பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு ஏழை என்று சான்று வழங்க திராவிட அரசு யோசிக்கும் போது கல்வி, அரசு வேலை, அரசியல் பதவி வாக்கு வங்கி, ஒற்றுமை இல்லாததால் ஒருபோதும் வழங்காது. BC யிலும் வாக்கு வங்கி குறைந்த சாதியினர் ஒடுக்க பட்டு வருகின்றனர். ஒரு தலைமையின் கீழ் ஒற்றுமை ஒருவழி. ஒருவருக்கு ஒரு ஓட்டு, (MC, MLA, MP) என்ற கோரிக்கை. அனைத்து சாதியினருக்கும் சமமான இட ஒதுக்கீடு.(3 சாதியினர் 3 தலைமுறையாக கல்வி, வேலை, அரசியல் ஆதிக்கம். சமூக ஏழை எளிய மக்களை காக்க நிரந்தர முழு வரிவிலக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X