பொது செய்தி

இந்தியா

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மற்றொரு மோசடி; ரூ.3,688 கோடியை சுருட்டியது டி.எச்.எப்.எல்

Updated : ஜூலை 10, 2020 | Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
Punjab National Bank, DHFL, Loans, Fraud, PNB, bank fraud, RBI, Mumbai, பஞ்சாப் நேஷனல் வங்கி, டிஎச்எப்எல், மோசடி

மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி ரூ.11,300 கோடி மோசடி செய்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில், திவான் ஹவுஸ்சிங் பைனான்ஸ் நிறுவனம் ரூ.3,688 கோடி கடன் மோசடி செய்துள்ளதாக ஆர்.பி.ஐ.,யிடம் பஞ்சாப் நேஷனல் வங்கி புகாரளித்துள்ளது.

புதுடில்லியை தலைமையிடமாக கொண்டு பஞ்சாப் நேஷனல் வங்கி செயல்பட்டு வருகிறது. மும்பையில் உள்ள பெரிய கார்ப்பரேட் கிளையில் ஏராளமான நிறுவனங்களுக்கு தொழில் கடன் அளித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இவ்வங்கியில் பல ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட நிறுவன விவரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 2018-ம் ஆண்டு வைர வியாபாரி நீரவ் மோடி ரூ.11,300 கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டார். அவர் தற்போது சிறையில் உள்ளார். 2019-ம் ஆண்டு பூஷன் பவர் மற்றும் ஸ்டீல் நிறுவனம் ரூ.3,800 கோடி கடன் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.


latest tamil news



அந்த வகையில் தற்போது அந்த பட்டியலில் நான்காவது மோசடி நிறுவனமாக டி.எச்.எப்.எல்., எனப்படும் திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் சேர்ந்துள்ளது. வீடு கட்ட கடன் வழங்கும் நிறுவனமான இது ரூ.1 லட்சம் கோடி கடன்களை குவித்துள்ளது. அதனை யாருக்கும் திருப்பி செலுத்தவில்லை. இந்த நிலையில் தங்களின் மும்பை பெரிய கார்ப்பரேட் கிளையில் ரூ.3,688.58 கோடியை அந்நிறுவனம் மோசடி செய்துள்ளதாக ஆர்.பி.ஐக்கு தகவல் அளித்துள்ளது. எஸ்.பி.ஐ., மற்றும் யூனியன் வங்கி ஆகியவையும் டி.எச்.எப்.எல்., மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளன.

ஜூன் மாதம் பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்ட அறிக்கையின் படி, 2019-20 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நிகர வாராக் கடன் ரூ.73,500 கோடி ஆகும். வங்கியின் மொத்த கடன்களில் இது 14.21% ஆகும். முந்தைய காலாண்டில் 15.5% ஆக இருந்தது. தற்போது கணிசமாக குறைந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
11-ஜூலை-202006:58:47 IST Report Abuse
அம்பி ஐயர் இந்தக் கம்பெனி.... ராபர்ட் பினாமியில்ல.....
Rate this:
Cancel
Raja - Thoothukudi,இந்தியா
11-ஜூலை-202006:14:49 IST Report Abuse
Raja எனக்கும் ரொம்ப வேண்டாம் ஒரு கோடிகடன் கொடுங்க ஆபீசர். கட்டலன்னா என் சொத்துக்களை எடுத்துக்கோங்க. சாகறவரை வசதியா வாழ்ந்துடறேன். பத்தாயிரம் கொடுக்கறதுக்கே பத்து கையெழுத்து பத்துநாள் அலைய விடுவீங்க. இந்த பிராடுங்களுக்கு எப்படி கொடுக்கறீங்க.
Rate this:
Cancel
10-ஜூலை-202020:31:44 IST Report Abuse
சந்திரசேகர் சாதாரண மனிதன் வீடு கட்டவோ அல்லது வியாபாரம் செய்யவோ பேங்கில கடன் கேட்டால் ஏன் கடன் கேட்க வந்தோம்னு நினைக்கிற அளவுக்கு டாக்குமெண்ட் கேட்டு மற்றும் அலைச்சல் செய்து கடைசியாக கடனும் கொடுக்க மாட்டார்கள். ஆனால் இந்த பணக்காரர்களுக்கு மட்டும் எதன் அடிப்படையில் கடன் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. அது எப்படி 5000கோடி 10000கோடி கொடுக்கிறார்கள். அவர்கள் இன்டால்மென்ட் பணம் கட்டவில்லை என்றால் உடனே நடவடிக்கை எடுக்க மாட்டார்களா. பேங்க் அதிகாரிகள் சம்மதத்தின் பேரில் தான் கடன் கொடுத்து இருப்பார்கள். முதலில் பேங்க் அதிகாரிகளை விசாரித்து நடவடிக்கை எடுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X