பொது செய்தி

தமிழ்நாடு

கோவை கொடிசியா வளாகத்தில் உபயோகித்த 'பிபிஇ கிட்'டுடன் சுற்றிய நாய்

Updated : ஜூலை 10, 2020 | Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

கோவை: கோவையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், கோவை கொடிசியா வளாகத்தில், 400 படுக்கை வசதிகளுடன், பிரத்யேக கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. கொரோனா தொற்று அறிகுறியுடன், பெரிய அளவில் பாதிப்பு இல்லாதவர்கள் இங்கு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.latest tamil news
இந்நிலையில் இன்று, கொடிசியா வளாகத்திற்கு கொரோனா நோயாளி ஒருவர் ஆம்புலன்சில் அழைத்துவரப்பட்டார். அவரை உரிய பாதுகாப்புடன் அறைக்குள் கூட்டிச் செல்லும் போது, ஆம்புலன்சில் இருந்த பயன்படுத்தப்பட்ட முகக்கவசம், பிபிஇ கிட் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள், கீழே விழுந்துள்ளன. நோயாளியை அழைத்துச் செல்வதில் கவனம் செலுத்திய ஊழியர்கள், உபயோகித்த, 'பிபிஇ கிட்'டை அலட்சியமாக அங்கு விட்டுச் சென்றனர். அங்கு சுற்றித்திரிந்த நாய் அதைக் கவ்விச் சென்றது. இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 'கொரோனா நோயாளியை நேரடியாக சந்திக்கும் மருத்துவர் அணியும் பிபிஇ கிட் என்ற கவச உடையை, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் அலட்சியமாக விட்டுச் சென்றுள்ளனர். இதை நாய் கவ்விச் சுற்றுவதால் கொரோனா பரவல் மேலும் அதிரிக்கும் சூழல் உருவாகியுள்ளது' என, பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.


latest tamil news
'கோவையில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அதைக் கட்டுப்படுத்த சுகாதாரப் பணியாளர்களும் மருத்துவர்களும் இரவு பகல் பாராமல் போராடி வருகின்றனர். இந்நிலையில், ஒரு சில மருத்துவப் பணியாளர்களின் அலட்சியம், ஒட்டுமொத்த மருத்துவப் போராளிகளுக்கும் அவப்பெயரைத் தேடித் தரும்' என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
10-ஜூலை-202017:30:34 IST Report Abuse
Visu Iyer கொரனாவை கண்டு பிடிக்க நாயை பயிற்சிக்கு வைத்து இருக்கிறார்களோ... இருக்கும்... இருந்தாலும் இருக்கும்.
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
10-ஜூலை-202017:20:08 IST Report Abuse
siriyaar கோரோனா வந்த இடங்களில் தொடர்பு ஏற்பட்டு அடுத்த நாளே டெஸ்ட் இரண்டு நாளில் இல்லை எனறு பதில், உடனே அவர்கள் வேலைக்கு செல்கின்றனர். ஆனால் டெஸ்ட் கிட் உற்பத்தியாளர்கள் சொல்லது 8 நாள் கழித்துதான் தெரியவரும் என்பது. எதற்கு வெட்டியாக டெஸ்ட் எடுத்து காசை விரயமாக்கனும், அதி நம்பிக்கை கொடுத்து பரப்பனும்.
Rate this:
Cancel
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
10-ஜூலை-202016:04:52 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniam இதிலும் அரசியலா??? அவர்கள் நோயாளியின் உயிருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தினை இப்படி கேவலப்படுத்தினால் அடுத்த முறை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பத்திரிகை,வட்ஸ்அப்ப், முகநூலுக்கு பயந்து முதலில் பொருள்களை பட்டிரப்ப்டுத்டிவிட்டு நோயாளியின் உயிருக்கு முக்கியத்டுவம் கொடுப்பார்கள். அதனால் இது போன்ற விஷயங்களை ஊடகங்க்களும் தவிர்க்கலாம். அதாவது சுனாமி நிகழ்வின் போது பலநாட்கள் அழுகிய உடல் களை சேவகர்கள் அப்புறப்ப்படுத்தினர்( உறவுகள் அருகில் செல்லக்கூட தயங்குவர் அவ்வலவு துர் நாற்றம் வீசும் ) சில ஊடகங்க்கள் அரசுக்கு எதிராக பேச வேண்டு மக்களின் வெறுப்பினை உருவாக்கவேண்டும் என்ற ஒரே " ஒரே' நோக்கில் இற்ந்தவர்களை சமூகசேவகர்கள் மரியாதை யுடன் கையாளவில்லை என ஒளிபரப்பி காட்சிகளியும் வெளியிட்டனர். அதே அரசியல் ஊடகங்ககளும் சரி அரசியல் கட்சி தலகளும் சரி அந்த பகுதியில் வாந்தி வரும் அளவு துர் நாற்றம் வீசியதால் அருகில் கூட சென்று காட்சிகளினை பதிவு செய்ய வில்லை. அது பொல் உள்லது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X