பொது செய்தி

இந்தியா

கல்வான் தாக்குதலை அடுத்து சீன செயலி பயன்பாட்டை குறைத்த இந்தியர்கள்

Updated : ஜூலை 10, 2020 | Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
Indians, Chinese App, Usage, Govt Ban, Galwan Clash, india, china, border crisis, Nielsen Media, இந்தியர்கள், சீனா, செயலி, பயன்பாடு, குறைப்பு, அரசு, தடை, நீல்சன்

புதுடில்லி: லடாக்கில் கல்வான் பள்ளதாக்கில் சீன வீரர்களின் அத்துமீறலை அடுத்து மத்திய அரசு தடை விதிக்கும் முன்பே சீன செயலிகளின் பயன்பாட்டை இந்தியர்கள் குறைத்து விட்டதாக நீல்சன் அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 15ம் தேதி லடாக்கில் கல்வான் பள்ளதாக்கில் இந்திய - சீன ராணுவ வீரர்கள் இடையேயான மோதலில் நம் ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 40க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. ஆனால் சீனா இதனை தற்போது வரை அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. ஜூன் 29ல் இந்தியாவின் ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் கண்டறியப்பட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.


latest tamil news


சந்தை ஆராய்ச்சி நிறுவனமான நீல்சன் நடத்திய ஆய்வில், ஜூன் 20ம் தேதி நிறைவடைந்த வாரத்தில், தங்களது மொபைல் போன்களில் சீன செயலிகளை தரவிறக்கம் செய்து வைத்திருந்தவர்களின் வாராந்திர பயன்பாடு 7 சதவீதம் முதல் 77 சதவீதம் வரை குறைந்தது. இது மேலும் தொடர்ந்து 76 சதவீதம் வரை குறைந்துள்ளது. முதல் நிலை நகரங்களில் பயனர்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 15 முதல் 24 வயது வரையிலான நபர்கள், இரண்டு பிரிவுகளிலும் சீன செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை வாரத்திற்கு 11 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.


latest tamil news


சீன செயலியை பயன்படுத்தியோரும் ஒரு நாளைக்கு சில முறை மட்டுமே பயன்படுத்தி உள்ளனர். ஜூன் 27ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் சராசரி அமர்வுகளின் எண்ணிக்கையில் 10 சதவீதம் சரிவடைந்து, ஒரு நாளைக்கு 5.4 சதவீதமாக குறைந்துள்ளது. ஜூன் 20ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இது 7.4 ஆக இருந்தது. முதல் நிலை நகரங்களில் 15 முதல் 24 வயதுடைய ஆண்கள் மத்தியில் செயலியை பயன்படுத்தும் நேரம் 18 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. இரண்டாம் நிலை நகரங்களில் 20 சதவீதம் சரிவடைந்துள்ளது.


latest tamil news


கொரோனா ஊரடங்கு சமயத்தில், ஜூன் 13ம் தேதி முடிவடைந்த வாரத்தில், வாரத்திற்கு பயன்பாடு உச்சபட்சமாக 80 சதவீதத்தை எட்டியிருந்தது. சராசரியாக நாளொன்றுக்கு 8 முறை பயன்படுத்தி வந்ததாக கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு தடை விதிப்பதற்கு முன்பே சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென தன்னெழுச்சியாக பல்வேறு பொதுநல அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. 15 முதல் 44 வயதுக்குட்பட்ட நபர்கள் பயன்படுத்தும் பிரபல ஆண்ட்ராய்டு இயக்க முறைமையில் இயங்கும் 1 லட்சம் மொபைல் போன்களை கண்காணித்து நீல்சன் அமைப்பு தகவல்களை திரட்டியுள்ளது.


latest tamil news


இதற்கிடையில், தொலைக்காட்சி பார்வையாளர்களை கணக்கிடும் பார்க் (BARC) அமைப்பின் புள்ளிவிவரப்படி, இது ஜூலை 3ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், வாராந்திர பார்வை 1.017 டிரில்லியன் நிமிடங்கள் வரை இருந்ததைக் காட்டியது. இது கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் பதிவான 887 பில்லியன் நிமிடங்களை விட அதிகமானது. ஆனால் ஊரடங்கின் போது எட்டிய 1.266 டிரில்லியன் உச்சத்தை விட குறைவானது என கூறியுள்ளது.

தகவலுக்காக செய்தி சேனல்களை பார்க்கும் பார்வையாளர்கள் கணிசமாக உயர்ந்தனர். அதே நேரத்தில் புதிய உள்ளடக்கம் இல்லாததால், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு பிரிவு சேனல்களை பார்ப்பது குறைந்துள்ளது. விளம்பரம் மந்தமாக இருந்ததால், பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தும், ஒளிபரப்பாளர்களிடம் விலை நிர்ணயம் செய்ய இயலவில்லை என கூறியுள்ளது. ஊரடங்கு சமயத்தில் புதிய உள்ளடக்கம் இல்லாத நிலையில் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்பட்ட ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாச தொடர்களால் உச்சத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - Thoothukudi,இந்தியா
11-ஜூலை-202006:07:30 IST Report Abuse
Raja திமுக ஆதரவு கூட்டம் முழுக்க சீன ஆதரவு கூட்டம். அதனால்தான் சீன ஆதரவு கருத்துக்கள் அதிகம் வெளியிடப்படுகிறது. அதுவும் தமிழ்நாட்டில்தான் அதிகம். அந்த கூட்டத்துக்கு எத்தனை தான் சீனதயாரிப்புகளை விட்டுவிட்டு சுதேசியை ஆதரியுங்கள்னு கூவினாலும் கேட்காம வியாக்கியானம் பண்ணுவாங்க. தமிழக சீரழிவுக்கு ஊழல்வாதிகளை பதவியில் வைக்கற ஜனங்கள்தான் காரணம்.
Rate this:
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
10-ஜூலை-202019:09:33 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி இப்பொழுது மத்திய அரசு தடை செய்துள்ளதாக சொல்லப்பட்ட TikTok மீண்டும் play store இல் வந்துள்ளது. மத்திய அரசின் தடை அவ்வளவுதானா?
Rate this:
Cancel
தியாகி சுடலை மன்றம் இவ்வளவு நடந்தும் நம்ப சுடலை பப்புஜி விளையாடிக்கிட்டு இருக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X