அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்க; யுஜிசி.,க்கு ராகுல் கோரிக்கை

Updated : ஜூலை 10, 2020 | Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (27)
Share
Advertisement
Rahul, Rahul gandhi, cancellation of exam, varsity exams, students, UGC, Exams, Pandemic, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, ராகுல், யுஜிசி, பல்கலை, தேர்வுகள், கொரோனா, நியாயமில்லை, ரத்து, கோரிக்கை

புதுடில்லி: கல்லூரிகள் மற்றும் பல்கலைகள் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என யுஜிசி அறிவித்த நிலையில், அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என காங்., எம்பி ராகுல் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பிரச்னையால் உயர்கல்வி நிறுவனங்களுக்கு மூன்று மாதங்களாக விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த கல்வி ஆண்டில் படித்த மாணவர்களுக்கு ஆண்டின் இரண்டாவது செமஸ்டர் தேர்வு நடத்தப்படவில்லை. இந்த தேர்வுகளை நடத்துவதா ரத்து செய்து விட்டு முந்தைய பருவ தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்குவதா என மாநில அரசுகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.


latest tamil news


இந்நிலையில் கல்லூரிகள் மற்றும் பல்கலைகள் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டியது கட்டாயம் என பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி. அறிவித்தது. இது குறித்து காங்., எம்பி., ராகுல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமல்ல. மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் கோரிக்கைகளை யுஜிசி கட்டாயம் கேட்க வேண்டும். அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட வேண்டும்; முந்தைய மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சியளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
11-ஜூலை-202007:01:48 IST Report Abuse
அம்பி ஐயர் தேர்வுகளை ரத்து செய்யச் சொல்லும் அறிவு ஜீவியே..... ஆன்லைன் வகுப்புகள் என்ற பெயரில் குழந்தைகளின் கண் பார்வையை மங்கச் செய்கிறார்களே..... அனைத்து ஆன்லைன் வகுப்புகளையும் தடை செய்ய வேண்டும்...... கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று அறிவிக்கத் தயாரா....??? பாகுபாடில்லாமல் அனைத்துக் கடசியினரும் பள்ளி கல்வி நிறுவனங்கள் நடத்தி.... மோசடி செய்து கொள்ளையடிக்கிறீர்களே.... ஆன் லை வகுப்புக்குத் தடை போடுங்கள் முதலில்..... அப்புறம் தேர்வுக்கு வரலாம்....
Rate this:
Cancel
Ray - Chennai,இந்தியா
11-ஜூலை-202000:57:23 IST Report Abuse
Ray தேர்தல்களை ரத்து செய்ய சொல்வாரா
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
10-ஜூலை-202022:20:47 IST Report Abuse
R. Vidya Sagar ஆஹா, மாணவர்கள் ஒட்டு எல்லாம் இவருக்குத்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X