முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா: 5 நாள் சுய தனிமையில் எடியூரப்பா

Updated : ஜூலை 10, 2020 | Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Yediyurappa, Staff, Tests Positive, Covid-19, Self Isolation, self quarantine, karnataka cm, staff, corona positive, coronavirus, எடியூரப்பா, கொரோனா, சுய தனிமைப்படுத்தல்,

பெங்களூரு: கர்நாடக முதல்வர் அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதால் தன்னை ஐந்து நாட்கள் சுய தனிமை செய்து கொண்டார் எடியூரப்பா. இந்த நாட்களில் ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தே பணியாற்றுவேன் என கூறியுள்ளார்.

கர்நாடகாவில் முதல் முறையாக கடந்த 8-ம் தேதி அன்று தான் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. பரிசோதனை எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளதால் அங்கு தற்போது தினசரி 2 ஆயிரத்துக்கும் மேல் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்படுகின்றனர். அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பெங்களூருவை சேர்ந்தவர்கள். கர்நாடகாவில் இதுவரை தொற்று பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்துள்ளது. பெங்களூருவில் பாதிப்பு 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 486 பேர் இதுவரை மாநிலத்தில் உயிரிழந்துள்ளனர்.


latest tamil news


கர்நாடக முதல்வர் எடியூரப்பா (77) பெங்களூருவில் தொற்று பரவலை தடுக்க 8 மண்டலங்களுக்கு பொறுப்பாளர்களாக 8 அமைச்சர்களை நியமித்துள்ளார். இந்த நிலையில் அவரது அலுவலக பணியாளர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், 5 நாட்கள் சுய தனிமை செய்துகொண்டிருப்பதாக அறிவித்துள்ளார். பயப்படும் படி ஒன்றும் இல்லை. வீட்டிலிருந்தே பணியாற்றுவேன். ஆன்லைன் வாயிலாக உத்தரவுகள் மற்றும் பரிந்துரைகளை அளிப்பேன் என டுவிட்டரில் கூறியுள்ளார்.


latest tamil news


டில்லியில் 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட கொரோனா வைரஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு போட்டியாக பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் 10,100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை கர்நாடக அரசு அமைத்துள்ளது. அனைத்து அறிகுறிகளற்ற கொரோனா தொற்றாளர்களும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட்டு கண்காணிக்கப்படுவதற்காக இது அமைக்கப்பட்டுள்ளது என்றும் எடியூரப்பா கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10-ஜூலை-202019:27:01 IST Report Abuse
Janarthanan டில்லியில் 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட கொரோனா வைரஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு போட்டியாக பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் 10,100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை கர்நாடக அரசு அமைத்துள்ளது - முன்னெச்சரிக்கை செயல்பாடாக கருத வேண்டும் தவிர போட்டியாக அல்ல இந்தியாவில் எங்கு எங்கு முடியோமோ அங்கு இது போல் தற்காலிக மருத்துவ வசதி ஏற்பாடு செய்வது தவறு இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X