பொது செய்தி

தமிழ்நாடு

'டிக் டாக்' க்கு மாற்றாக புதிய 'செயலி': திருப்பூர் பட்டதாரி வாலிபர்கள் அசத்தல்

Updated : ஜூலை 10, 2020 | Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
திருப்பூர்: 'டிக் டாக்' க்கு மாற்றாக புதிய 'செயலி' ஒன்றை திருப்பூர் பட்டதாரி வாலிபர்கள் கண்டுபிடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.லடாக்கின் கல்வான் பகுதியில், சீன வீரர்கள் தாக்கியதில், 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய பதிலடியில் சீன வீரர்களும் உயிரிழந்தனர். அதில், எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவலை அந்நாடு வெளியிடவில்லை. இதனை தொடர்ந்து
டிக்டாக்,புதிய செயலி, திருப்பூர், பட்டதாரி வாலிபர்கள், அசத்தல்

இந்த செய்தியை கேட்க

திருப்பூர்: 'டிக் டாக்' க்கு மாற்றாக புதிய 'செயலி' ஒன்றை திருப்பூர் பட்டதாரி வாலிபர்கள் கண்டுபிடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.

லடாக்கின் கல்வான் பகுதியில், சீன வீரர்கள் தாக்கியதில், 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய பதிலடியில் சீன வீரர்களும் உயிரிழந்தனர். அதில், எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவலை அந்நாடு வெளியிடவில்லை. இதனை தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு கருதி, சீனாவின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதில்,' டிக் டாக்'கும் ஒன்று.பெரும்பாலான மக்கள் பயன்படுத்தக் கூடிய 'செயலி'யாக 'டிக்டாக்' இருந்து வந்தது. தற்போது அதை பயன்படுத்த முடியாத நிலையில், அதன் பயன்பாட்டாளர்கள் புலம்பி வருகின்றனர். அதற்கு மாற்று செயலிகளை தேடி வந்தனர்.


latest tamil news

திருப்பூர் வாலிபர்கள் அசத்தல்


இச்சூழலில், 'டிக் டாக்' செயலியை போலவே, தமிழ்நாட்டில் முதன்முறையாக 'சில்5' (CHILL5) என்ற ஆப் ஒன்றை திருப்பூரை சேர்ந்த ஹரிஷ்குமார், வெங்கடேஷ், சவுந்தர்குமார், சந்தீப் மற்றும் கோகுல் என்ற, ஐந்து பட்டதாரி வாலிபர்கள் உருவாக்கியுள்ளனர். இதற்காக கடந்த ஜன., மாதம் முதலே இதற்கான பணியில் ஈடுபட்டு, கடந்த 4 ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.
பார்ப்பதுக்கு 'டிக் டாக்' ஆப்பை போலவே காட்சி தரும் இந்த செயலியில், வீடியோ பதிவேற்றம், பரிமாற்றம் என, பல அம்சங்கள் கொண்டுள்ளது. தமிழக வாலிபர்கள் வடிவமைத்த காரணத்தால், பயன்பாட்டாளர்கள் கொடுக்கும் புகார்கள் உடனடியாக மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வாலிபர்கள் கூறுகையில், 'அரசு கூறியுள்ள அனைத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு, செயலியை உருவாக்கியுள்ளோம். பயன்பாட்டாளர்கள் கொடுக்கும் தகவல்கள் மிகவும் பாதுகாக்கப்படும். வீடியோ தொடர்பாக ஏதாவது புகார் வந்தால், அதை ஆராய்ந்து பார்த்து, உடனடியாக தளத்தில் இருந்து நீக்கப்படும் என்பது, இந்த 'செயலி' யின் சிறப்பு அம்சம். ஆபாசங்கள் இல்லாத வகையில் வீடியோக்கள் இடம்பெற செய்வோம் என்றும் உறுதியாக நம்புகிறோம். இதுவரை, 20 ஆயிரம் பேருக்கு மேல் டவுன்லோடு செய்துள்ளனர்,'' என்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
11-ஜூலை-202004:58:02 IST Report Abuse
NicoleThomson வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
SanDan - NYK,யூ.எஸ்.ஏ
11-ஜூலை-202004:25:48 IST Report Abuse
SanDan TikTok is absolutely useless. It has done more harm to India than good. Was relieved that it was gone. Though intelligent work, wish our friends had focused on something more useful like replacement for Zoom
Rate this:
Cancel
10-ஜூலை-202022:27:35 IST Report Abuse
சுடலை மாடசாமி GP Muthu
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X