பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் தினமும் 40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா: பாதிப்பு அதிகரிப்பதால் மக்கள் அச்சம்

Updated : ஜூலை 10, 2020 | Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது; இருவர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், மொத்த பாதிப்பு 1,071 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 14 ஆகவும் உயர்ந்துள்ளது.



latest tamil news




கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40க்கும் குறையாமல் பதிவாகி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிப்பால் மக்களிடையே மிகுந்த அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை, காந்திபுரம் நூறடி ரோட்டில் செயல்பட்டு வரும் பிரபல நகைக்கடை ஒன்றில் பணியாற்றும் ஊழியர்கள் இருவருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இன்று மேலும் 13 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 30 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இப்படி இன்று ஒரே நாளில் 43 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,071 ஆக உயர்ந்தது. இதில், 320 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்; 744 பேர் இ.எஸ்.ஐ., மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


latest tamil news




இருவர் உயிரிழப்பு


கொரோனாவால் பாதிக்கப்பட்ட கோவை போத்தனூரை சேர்ந்த 58 வயது ஆண், பூமார்க்கெட் பகுதியை சேர்ந்த 61 வயது பெண் இருவரும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதன்மூலம், கோவையில் இறப்பு எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Elango - Kovai,இந்தியா
11-ஜூலை-202006:55:12 IST Report Abuse
Elango உண்மை நிலை இன்னும் மோசம். மக்களே உங்களுக்கு நீங்கள் தான் பாதுகாப்பு...
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
11-ஜூலை-202006:10:55 IST Report Abuse
Mani . V "சமூகத் தொற்று இல்லை" என்று சொன்ன டாக்டரை யாராவது பார்த்தீர்களா? நற.....நற.....நற.....
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
11-ஜூலை-202005:25:04 IST Report Abuse
skv srinivasankrishnaveni 10ஓர் 20%ஜனம்களே கட்டாயம் போவோம் என்று அலையுறாங்களே என்னங்க செய்ரது கஷ்டமா தான் இருக்கு காய்கனிகள்கூட வாங்கவேமுடியிலிங்க்லே , காய்கள் நெறைய விளைகிறதாக்கும் கோவைமாநகரிலே என்று சொல்லுவாங்க ஆனால் விளைச்சல் இருந்தும் வியாபாரம் ஆகாமல் கிசங்கல்படும் பாடு தேறியுங்களா .பாதகமா பரவ மக்களேதான் காரணம் சொல்றதுசுலாபம் வூட்டுலே கிடங்க என்று சோறாக்கவேண்டும் கூடவே குழம்பு வைக்க பொரியல் செய்ய காய்கள் வேண்டிருக்கே கொரோனாவால் வியாதி ஒருபக்கம் பொருளாதாரம் செத்துண்டுருக்கே அதுதான் பெரும்கொடுமை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X