பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டுமனைகளாகும் விவசாய நிலம் பதிவுத்துறை சலுகையால் ஆபத்து

Added : ஜூலை 10, 2020
Share
Advertisement

சென்னை; கிராமப்புறங்களில், 10 சென்ட் வரையிலான விவசாய நிலங்களை, வீட்டுமனைகளாக பதிவு செய்ய, பதிவுத்துறை வழங்கிய சலுகையால், அங்கீகாரமற்ற மனைகள் அதிகமாவதாக, நகரமைப்பு திட்டத்துறை புகார் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், அங்கீகாரமில்லா மனைகள் விற்பனையை பதிவு செய்ய, தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான தடை உத்தரவு, 2017ல் அமலுக்கு வந்தது. இதன்படி பத்திரப்பதிவில் சார் - பதிவாளர்கள் கவனமாக இருக்க, பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.இந்நிலையில், கிராம பகுதிகளில், 10 சென்ட் வரையிலான விவசாய நிலங்களை, வீட்டுமனைகளாக பதிவு செய்ய, பதிவுத்துறை செயலர், மார்ச், 10ல் சில அறிவுரைகளை வழங்கினார். இதன்படி, தனி நபர் பெயரில் உள்ள, 10 சென்ட் விவசாய நிலம், மனையாக விற்பனை செய்யப்படும் நிலையில் அது, 'லே அவுட்' வரம்புக்குள் வராது. இத்தகைய நிலங்களை, ஒன்றுக்கு மேற்பட்ட பகுதிகளாக பதிவு செய்யவும், அனுமதி வழங்கப்படுகிறது.

நகரமைப்பு திட்டத்துறை அதிகாரிகள் கூறியதாவது:பத்திரப்பதிவு நிலையில் ஏற்படும் குழப்பங்களை தீர்க்க, பதிவுத் துறை செயலர் வழங்கிய அறிவுரை தவறாக பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களில், இதை பயன்படுத்தி, அங்கீகாரமில்லா மனைகள் பதிவு செய்யப்படுகின்றன.விவசாய நிலங்களை, அங்கீகாரமில்லாத மனைகளாக விற்பது, மீண்டும் அதிகரிக்க, இது வழிவகுக்கும். சில ஆண்டுகளுக்கு முன், டி.டி.சி.பி., இயக்குனராக இருந்த பீலா ராஜேஷ் தான், தற்போது பதிவுத்துறை செயலராக உள்ளார்.எனவே, அவர் தலையிட்டு, இப்பிரச்னையில் புதிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X