கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அதிக விலைக்கு மது விற்பனை? 'டாஸ்மாக்' உறுதி செய்ய உத்தரவு!

Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை; கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படவில்லை என்பதை, 'டாஸ்மாக்' நிர்வாகம் உறுதி செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த, குல்லுபடையாச்சி என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'மதுபான கடைகளில், அனைவரும் பார்க்கும் வகையில், விலை பட்டியல் வைக்க வேண்டும். 'பாட்டில்களில் குறிப்பிட்ட விலைக்கும் அதிகமாக விற்பதற்கு, தடை விதிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

இம்மனுவுக்கு, 'டாஸ்மாக்' நிறுவன நிர்வாக இயக்குனர் கிர்லோஷ்குமார், தாக்கல் செய்த பதில் மனு:திருத்தப்பட்ட விலை பட்டியல், அனைத்து மதுபானக் கடைகளிலும் வைக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட விலைக்கும் அதிகமாக விற்கப்படுகிறதா என்பதை சரிபார்க்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதிக விலைக்கு விற்பவர்களுக்கு, கடுமையான தண்டனை விதிப்பது குறித்து, 2019 ஜனவரியில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. ஊழியர்களுக்கும், மேற்பார்வையாளர்களுக்கும், 1,000 முதல், 9,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல், 2020 மார்ச் வரை, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, 10 ரூபாய் வரை கூடுதலாக விற்ற வகையில், 4,664 வழக்குகளும்; 10 ரூபாய்க்கும் அதிகமாக விற்ற வகையில், 4,655 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.இவ்வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கே.செல்வராஜ், டாஸ்மாக் தரப்பில், வழக்கறிஞர் சதீஷ் ஆஜராகினர்.டாஸ்மாக் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவை பதிவு செய்து, அரசு நிர்ணயித்த விலைக்கும் கூடுதலாக மதுபானங்கள் விற்கப்படவில்லை என்பதை, டாஸ்மாக் நிர்வாகம் உறுதி செய்யும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை முடித்து வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
11-ஜூலை-202020:27:00 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN கோர்ட் அரசியல் நிர்வாகம் நடத்த ஆசை கொள்கிறதோ....வேடிக்கைதான்.....
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
11-ஜூலை-202007:46:38 IST Report Abuse
natarajan s உணவு பொருட்களை அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகளை கண்டு கொள்ளாத நீதி மன்றம், TASMAC சரக்கை அதிக விலைக்கு விற்காமல் அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு போடுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X