பொது செய்தி

தமிழ்நாடு

'ஆக்ட்டிங்' டிரைவர்கள் 40 ஆயிரம் பேர் தவிப்பு

Added : ஜூலை 10, 2020
Share
Advertisement

சென்னை; தமிழகம் முழுதும், 40 ஆயிரம், 'ஆக்ட்டிங்' டிரைவர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர்.

சென்னையில், 15 ஆயிரம் உட்பட தமிழகம் முழுதும், 40 ஆயிரம் ஆக்ட்டிங் டிரைவர்கள் உள்ளனர். இவர்கள், தொடர்ந்து ஒரே வாகனத்தை ஓட்டுவதில்லை. டிராவல்ஸ் நிறுவனங்களில், கார், வேன், டெம்போ வாகனங்களுக்கான நிரந்தர ஓட்டுனர்கள் விடுப்பு எடுக்கும் போது, இவர்களை பயன்படுத்தி கொள்கின்றனர்.

அதேபோல், சொந்த பயன்பாட்டு வாகனங்களை, பலர் வெளியூர்களுக்கு எடுத்துச் செல்லும் போதும், இவர்களுக்கு சம்பளம் கொடுத்து, பயன்படுத்தி கொள்கின்றனர். அவர்களுக்கான பயணச் செலவு, சாப்பாட்டுச் செலவு கொடுத்து விடுவர். இவர்களுக்கு ஒரு நாளைக்கு, குறைந்தது, 1,000 ரூபாய் சம்பளம் கிடைத்து வந்தது. தற்போது, சுற்றுலா தலங்கள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், இவர்களுக்கு வேலை கிடைக்காமல், வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X