பொது செய்தி

தமிழ்நாடு

'நீட்' பயிற்சி ஆகஸ்ட் வரை நீட்டிப்பு

Added : ஜூலை 10, 2020
Share
Advertisement

சென்னை; அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' நுழைவு தேர்வுக்கான பயிற்சி வகுப்பு, ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில், தனியார் பள்ளி மாணவர்களே, அதிக அளவில் தேர்ச்சி பெறுகின்றனர்.எனவே, அரசு பள்ளி மாணவர்களும் மருத்துவ படிப்பில் சேரும் வகையில், பள்ளி கல்வித்துறை சார்பில், இலவச நீட் பயிற்சி வழங்கப்படுகிறது. ஊரடங்கு காரணமாக, நேரடி வகுப்புகள் நடத்த முடியாததால், 'ஆன்லைனில்' பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இரண்டு மாதங்களாக நடந்து வரும் பயிற்சி வகுப்புகள், இந்த மாதம் முடியவிருந்தன.இந்நிலையில், நீட் தேர்வு, ஜூலையில் இருந்து, செப்டம்பர், 13க்கு மாற்றப்பட்டுள்ளது. அதனால், ஆகஸ்ட் வரை, நீட் பயிற்சி வகுப்புகளை நீட்டித்து, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X