பொது செய்தி

தமிழ்நாடு

கிருமி நாசினி வரி ஏய்ப்பு? கடைகள் கலக்கம்!

Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கிருமி நாசினி தயாரிப்பு நிறுவனங்கள் பலவும், வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக, மருந்துக் கடைகளிலும், சோதனை நடத்த வாய்ப்புள்ளது.

கொரோனா பரவலை தொடர்ந்து, கைகளைக் கழுவுவதற்கு, 'ஆல்கஹால்' கலந்த கிருமி நாசினிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. திடீரென இவற்றுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. பல நிறுவனங்கள், குறைந்தபட்ச விலை நிர்ணயம் எதுவும் இன்றி, கூடுதல் விலைக்கு இவற்றை விற்றன.இந்த நிறுவனங்கள் பலவும், வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல் எழுந்துள்ளது.

மத்திய, ஜி.எஸ்.டி., நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், பல நிறுவனங்களில் ஆய்வுகளை மேற்கொண்டபோது, வரி ஏய்ப்பு நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இது தொடர்பாக, 62 நிறுவனங்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டுள்ளது. கிருமி நாசினிகள், மருந்துக் கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவை முறையாக விற்கப்பட்டதா, என, மருந்துக் கடைகளுக்கு வழங்கப்பட்ட பில்கள் சோதிக்கப்படலாம் என்பதால், வினியோக நிறுவனங்கள் மற்றும் மருந்துக்கடை உரிமையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
- நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
11-ஜூலை-202017:57:17 IST Report Abuse
RajanRajan எந்த சில்லறை விற்பனை கடையிலும் விற்கும் சாமான்களுக்கு கணினி பில் தருவதில்லை. வணிக அதிகாரிகள் சோதனை செய்யும் போது பார்த்தல் ஏதாவது ஒரு பில் போட்டு சட்டத்தை ஒட்டி விடுவானுங்க. அரசு வழங்கும் வரி விலக்குகளுக்கும் சேர்த்து பில் கொடுக்காமல் விற்று துட்டு பார்த்துடுவானுங்க. எனவே கணினி பில் வசதி எல்லாம் விற்பனை நிலையங்களிலும் கண்டிப்பாக வேண்டும் என்று சட்டம் போட்டு அமல் படுத்துங்கள் அல்லது கடையை சீல் வையுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X