சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மலைச்சரிவில் விபத்து: தேனி ராணுவ வீரர் பலி

Added : ஜூலை 10, 2020
Share
Advertisement
 மலைச்சரிவில் விபத்து:  தேனி ராணுவ வீரர் பலி

தேனி; காஷ்மீர் லடாக் மலைச்சரிவில் நடந்த விபத்தில், தேனி ராணுவ வீரர் பலியானார். அவரது உடல், இன்று சொந்த ஊருக்கு வருகிறது.

தேனி மாவட்டம், குச்சனுார் துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்தவர், அழகுராஜா, ௪௧. ஒடிசா ராணுவ பட்டாலியனில், கனரக வாகன டிரைவராக, 15 ஆண்டுகள் பணியாற்றினார்.நேற்று முன்தினம், முகாமிலிருந்து ராணுவ தளவாடங்களை ஏற்றிய லாரியில், காஷ்மீரின் லடாக் பகுதிக்கு சென்றார்.

அப்போது, லடாக் மலைச்சரிவில், லாரி விபத்தில் சிக்கியதில், அழகுராஜா உட்பட இருவர் பலியாயினர்.கடந்த மார்ச் மாதம், ஓய்வு பெறவிருந்த அழகு ராஜா, தன் விருப்பத்தின் அடிப்படையில், கூடுதலாக இரு ஆண்டுகள், ராணுவ பணியில் நீடித்தார். அவருக்கு இந்த சோக நிகழ்வு நடந்து உள்ளது. அவரது உடல், நேற்று விமானத்தில் கோவை வந்தது. ராணுவ வாகனத்தில், இன்று காலை, 6:00 மணிக்கு, சொந்த ஊருக்கு வருகிறது. பின், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.அழகுராஜாவின் மனைவி ராணி, 14 வயது மகள், 9 வயது மகனுடன், குச்சனுாரில் வசிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X