பொது செய்தி

இந்தியா

வந்தே பாரத் ரயில்கள் ; இந்திய ரயில்வேயில் மேலும் 44 அரை அதிவேக ரயில்கள்

Updated : ஜூலை 10, 2020 | Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement

புதுடில்லி : இந்திய ரயில்வே அமைச்சகத்தின் வந்தே பாரத் ரயில்கள் தொடர்பாக மேலும் 44 அரை அதிவேக ரயில்கள் இயக்கம் குறித்த ஏலம் இன்று திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.latest tamil newsஇந்திய ரயில்வே ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகளை செய்து வருகிறது. இதன் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாயை மிச்சப்படுத்தும். தொடர்ந்து, 44 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அரை அதிகவேக ரயில் திட்டத்திற்கான ஏல நடைமுறையை இந்திய ரயில்வே அமைச்சகம் இன்று திறந்தது. நிதி ஏலச் செயல்பாட்டின் கீழ், ஆறு பெரிய நிறுவனங்கள் தங்கள் ஏலங்களை சமர்ப்பித்துள்ளன. முதல் வந்தே பாரத் ரயில்பெட்டிகளை சென்னை ரயில்பெட்டி தொழிற்சாலை (ICF) உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

இந்திய ரயில்வே தற்போது இரண்டு உலகத் தரம் வாய்ந்த வந்தே பாரத் ரயில்களை இயக்குகிறது. அவை ரயில் புது டில்லி - வாரணாசி மற்றும் புதுடில்லி - கத்ரா இடையே இயங்குகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அதிகபட்சமாக 160 கிமீ வேகத்தில் இயக்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டு ரயில்களும் தங்கள் இடங்களை அடைய வெறும் 8 மணிநேரம் ஆகும், இதனால் பயண நேரத்தை பெருமளவில் குறைக்கலாம். சோதனையின் போது வந்தே பாதர ரயில் 180 கி.மீ வேகத்தில் சென்றது. இது இந்தியாவின் வேகமான ரயிலாகும்.


latest tamil newsகடந்த ஆண்டு, மேலும் 44 'மேக் இன் இந்தியா' வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை தயாரிப்பதற்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்திருந்தது. புதிய சுய இயக்கப்படும் இயந்திரம் (self-propelled engine-less train) குறைவான ரயில் பெட்டிகள் மிகவும் மேம்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கும். இதில் இன்னும் மேம்பட்ட அம்சங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஐசிஎப், கடந்த ஆண்டு அதிவேக ரயில்பெட்டிகளுக்கான மின்சார உபகரணங்கள் மற்றும் பிற பொருட்களை வழங்குவதற்கான டெண்டரை வெளியிட்டது. ஒவ்வொன்றும் 16 ரயில்பெட்டிகளை கொண்டது.

இந்த ரயில்பெட்டிகளில், அமரக்கூடிய வசதி, தானியங்கி கதவுகள் உட்பட நவீன வசதிகள் அடங்கியிருக்கும். பழைய வந்தே பாரத் ரயில்களை போல் அல்லாமல், புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் 4 பெட்டிகளுடன் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இருக்கும். அவை தேவையை பொறுத்து ரயிலில் இருந்து பிரிக்கப்படலாம் அல்லது இணைக்கப்படலாம். தேவைஅதிகரித்தால் ரயில் பெட்டிகளை அதிகப்படுத்தலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rameeparithi - Bangalore,இந்தியா
11-ஜூலை-202011:59:20 IST Report Abuse
Rameeparithi ஜெய்ஹிந்த் பாரத் ...
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
11-ஜூலை-202010:27:53 IST Report Abuse
தமிழ்வேள் இவற்றிலுள்ள பெரிய பிரச்சினை , டிராகஷன் பவர் தடைப்பட்டால் , அப்படியே நின்றுவிடும் ..ஆனால் தனி எஞ்சின் மட்டும் இணைக்கப்பட்ட ரயில் வண்டி குறைந்த பட்சம் அடுத்த ரயில் நிலையம் வரை பாதுகாப்பாக இயக்கப்பட முடியும் ..இந்த வகை யூனிட் டைப் ரயில்கள் குறைந்த தூர பாசஞ்சர் வண்டிகளுக்கு மட்டுமே லாயக்கு ....மேற்கத்திய நாடுகளிலும் இதுதான் நிலை ...
Rate this:
Cancel
truth tofday - india,இந்தியா
11-ஜூலை-202009:51:35 IST Report Abuse
truth tofday உண்மையை சொல்லும் நீங்கள் தேசத்துரோகி அதாவது அறுபது வருடத்தில் ஒன்றுமே உருவாக்கப்படவில்லை வெறும் ஆறு வருஷத்தில் எல்லா இடங்களிலும் ஐ சி எப் உருவானது என்று சொன்னால் மட்டுமே நீங்கள் தேசபக்தர் சொல்வீர்களா சொல்வீர்களா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X