பொது செய்தி

இந்தியா

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இளம் டாக்டர் தற்கொலை

Updated : ஜூலை 10, 2020 | Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

புதுடில்லி: டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்இளம் டாக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஒரு வாரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும்.latest tamil newsநாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையில் டில்லி மாநிலம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இதன்காரணமாக பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தும் முயற்சியில் மருத்துவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இருந்த போதிலும் டாக்டர்கள் மன அழுத்தத்துடன் பணி புரிந்து வருவதாக பல்வேறு தரப்பிலும் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வருபவர் அனுராக்குமார் (25). இளம் வயது மருத்துவரான இவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள விடுதியில் தங்கிஇருந்து பணிபுரிந்துவருகிறார். மொத்தம் 18 மாடிகொண்ட விடுதியில் குமார் 10 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது செல்போன் விடுதியின் மாடியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விசாரணையில் அவர் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. டாக்டரின் தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


latest tamil news
ஒரு வாரத்திற்குள் இரண்டாவது சம்பவம்37 வயதான பத்திரிகையாளர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 6 ம் தேதி அவர் மருத்துவமனையின் நான்காவது மாடியில்இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் நிகழ்ந்து ஒரு வார காலத்திற்குள் இரண்டாவது சம்பவமாக டாக்டரின் தற்கொலை சம்பவம் நடந்தேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
11-ஜூலை-202022:09:51 IST Report Abuse
Vijay D Ratnam இதுவே சென்னைல நடந்திருந்தால் அதை வச்சி இங்கு போராளீஸ் பொங்கியிருப்பாய்ங்க. கண்டனம், ஆர்ப்பாட்டம், போராட்டம், சவால், சவடால், மனிதசங்கிலி என்று ஒரு மாசத்துக்கு பஃபூன்கள் ஆட்டம் பார்த்திருக்கலாம். சீனிசக்கர சித்தப்பா சிலேட்ல எய்தி நக்கப்பா ஆக எடப்பாடி பதவி விலகவேண்டும் என்று தலைவரு பொங்கி வழிந்திருப்பாரு. சரி பலூன்காரன் சத்தத்தையே காணோமே என்னாச்சி.
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
11-ஜூலை-202012:03:57 IST Report Abuse
mindum vasantham oru maalayai pottu ameer mathiri naalu pera anuppi purali kilappi dmk en anga porattam panna koodathu
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
11-ஜூலை-202008:30:16 IST Report Abuse
VENKATASUBRAMANIAN First find out the reason for these type of incidents
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X