அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஊட்டியில் மருத்துவ கல்லுாரி ரூ.447 கோடியில் கட்ட அடிக்கல்

Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை; ஊட்டியில், 447.32 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ள, அரசு மருத்துவக் கல்லுாரிக்கு, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று அடிக்கல் நாட்டினார்.

அரசு மருத்துவக் கல்லுாரி இல்லாத மாவட்டங்களில், தமிழக அரசு படிப்படியாக, மருத்துவக் கல்லுாரிகளை ஏற்படுத்தி வருகின்றது.அரசு ஒப்புதல்கடந்த ஆண்டு, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நீலகிரி, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலுார், கள்ளக்குறிச்சி என, 11 மாவட்டங்களில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் துவங்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இவற்றில், ௧௦ மாவட்டங்களில், புதிய அரசு மருத்துவக் கல்லுாரி அமைக்க, முதல்வர் இ.பி.எஸ்., அடிக்கல் நாட்டி உள்ளார்.கட்டுதல்நேற்று, 11வது அரசு மருத்துவக் கல்லுாரியாக, நீலகிரி மாவட்டம் ஊட்டியில், 40 ஏக்கரில் கட்டப்பட உள்ள, புதிய அரசு மருத்துவக் கல்லுாரிக்கு, முதல்வர் இ.பி.எஸ்., 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, அடிக்கல் நாட்டினார்.இந்த கல்லுாரிக்கு, 447.32 கோடி ரூபாய், நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பங்களிப்பாக, 195 கோடி ரூபாய், தமிழக அரசின் பங்களிப்பாக, 130 கோடி ரூபாய், கட்டடங்கள் கட்ட கூடுதலாக, 122.32 கோடி ரூபாய் வழங்கப்படும்.

முதற்கட்டமாக, தமிழக அரசு, 110 கோடி ரூபாய்; மத்திய அரசு, 50 கோடி ரூபாய் விடுவித்து உள்ளன. நீலகிரி மாவட்டத்தில், அரசு மருத்துவக் கல்லுாரி கட்டடங்கள், 141.30 கோடி ரூபாய் மதிப்பிலும், மருத்துவமனை கட்டடங்கள், 130.27 கோடி ரூபாய் மதிப்பிலும், குடியிருப்பு மற்றும் விடுதி கட்டடங்கள் போன்றவை, 175.75 கோடி ரூபாயிலும் கட்டப்படும்.பங்கேற்புஇந்த மருத்துவக் கல்லுாரி, 150 எம்.பி.பி.எஸ்., இடங்களுடன் நிறுவப்படும். அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில், அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர், தலைமை செயலர் சண்முகம், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
11-ஜூலை-202015:35:11 IST Report Abuse
Loganathan Kuttuva The demand for medical seats will come down like engineering colleges if number of medical collges are increased.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X