கொரோனாவை விட கடும் ஆபத்தான நோய் பரவுது: சீனா எச்சரிக்கை

Updated : ஜூலை 10, 2020 | Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement

பீஜிங்: மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில், கொரோனாவை விட ஆபத்தான ஒரு நோய் வேகமாக பரவி வருவதாக, சீனா எச்சரித்துள்ளது.



latest tamil news


சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் வேகமாக பரவி, பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 'கொரோனா வைரஸ் பற்றிய தகவலை, சீனா, மற்ற நாடுகளுக்கு முன் கூட்டியே தெரிவிக்காதது தான், பாதிப்பு அதிகரித்ததற்கு காரணம்' என, அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில், கஜகஸ்தான் நாட்டில் உள்ள சீன துாதரகம், அங்கு வசிக்கும் தங்கள் நாட்டு மக்களுக்காக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது; அதில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனாவை விட ஆபத்தான நோய், கஜகஸ்தான் முழுதும் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய்க்கு, கடந்த ஆறு மாதங்களில் மட்டும், 1,772 பேர் பலியாகி உள்ளனர். ஜூனில் மட்டும், 628 பேர் பலியாகி விட்டனர்.


latest tamil news


கொரோனாவால் பலியானோரின் விகிதத்தை விட, இந்த புதிய நோயால் பலியானோரின் விகிதம் அதிகமாக உள்ளது. எனவே, கஜகஸ்தானில் உள்ள சீன மக்கள், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கஜகஸ்தானிலிருந்து சீனாவுக்கு வருவோர் பற்றிய தகவல் முன் கூட்டியே தெரிவிக்கப்பட வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொய் செய்தி:


இது குறித்து கஜகஸ்தான் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'சீன துாதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு, மிகவும் தவறானது. உறுதி செய்யப்படாத ஒரு விஷயத்தை சீன துாதரகம் வெளியிட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில், உலக சுகாதார நிறுவனம் தீவிரமாக களம் இறங்கியுள்ளது. சுகாதார நிறுவனத்தின் நிபுணர்கள் குழு, சீனாவில், அடுத்த இரண்டு நாட்களுக்கு நேரடியாக கள ஆய்வு நடத்தி, விபரங்களை சேகரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
14-ஜூலை-202009:34:03 IST Report Abuse
S. Narayanan சீனா தலைமையை அழித்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும்.
Rate this:
Cancel
Ray - Chennai,இந்தியா
11-ஜூலை-202016:10:10 IST Report Abuse
Ray நாங்க சொல்லி விட்டோம் நாங்க மறைச்சிட்டதா கூவ கூடாது மழை பெய்யலாம் அல்லது புயலாக மாறலாம் இனி ஒங்க பாடு
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
11-ஜூலை-202012:56:45 IST Report Abuse
Balasubramanian Ramanathan சீத்தாராம் ஏச்சுரி, குலாம்நபி ஆசாத், டேனியல் ராஜா, ராகுல் தம்பி, முத்தரசரே விரைந்து சென்று கள நிலவரத்தை கூறுங்களேன். பீளீஸ். பரவாயில்லை இம்முறை காஷ்மீரை தாண்டி செல்லுங்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X