அரசியல் செய்தி

தமிழ்நாடு

நெடுஞ்செழியனுக்கு சிலை: முதல்வர் இபிஎஸ் அறிவிப்பு

Updated : ஜூலை 11, 2020 | Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
 நெடுஞ்செழியனுக்கு சிலை: முதல்வர் இபிஎஸ் அறிவிப்பு

சென்னை; 'நெடுஞ்செழியனுக்கு சிலை வைக்கப்படுவதுடன், அவரது பிறந்த நாள், அரசு விழாவாக, ஆண்டுதோறும் கொண்டாடப்படும்' என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:திராவிட இயக்க மூத்த தலைவர்களில் ஒருவர், தமிழக அரசில் நீண்ட காலமாக அமைச்சராக பணியாற்றியவர், நெடுஞ்செழியன்.நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கண்ணபுரத்தில், 1920 ஜூலை, 11ல் பிறந்தார். தமிழ் இலக்கியத்தில், முதுகலை பட்டம் பெற்றவர்.எழுத்தாளர், இதழாளர், அரசியல் வல்லுனர், சிறந்த சொற்பொழிவாளர் என, பன்முகத்தன்மை கொண்டவர்.

அண்ணாதுரை அமைச்சரவையில், கல்வி மற்றும் தொழில் துறை அமைச்சராக இருந்தார்.எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அமைச்சரவையில், நிதித் துறை அமைச்சராக இருந்தார். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஆகியோர் மறைந்தபோது, இடைக்கால முதல்வராக பதவி வகித்தார்.அவரை சிறப்பிக்கும் வகையில், சென்னை, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில், தமிழக அரசு சார்பில், முழு திருவுருவ வெண்கல சிலை அமைக்கப்படும்.அவரது பிறந்த நாளான, ஜூலை, 11, அரசு விழாவாக, ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும்.அவரது குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்று, அவர் எழுதிய, 'வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும்' என்ற நுாலை அரசுடைமையாக்க, அரசு நடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு, முதல்வர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
babu - Atlanta,யூ.எஸ்.ஏ
12-ஜூலை-202000:18:09 IST Report Abuse
babu Why to stop there keep a statue on every streets for politicians wives , their pet dogs.
Rate this:
Cancel
kuruvi - chennai,இந்தியா
11-ஜூலை-202022:38:01 IST Report Abuse
kuruvi ஊர் எரியும்போது பிட்டில்ல்வாசிதா மன்னனை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம் .அதர்க்கு அடுத்த கதை இதுதான் .அரசாட்சியில் இருப்பவர்கள் ஒவொரு சல்லிக்காசும் செலவிடும் போது அது யாருடைய பணம் ?அதுசெலவிடும்போது யாருக்காக செலவிடப்படவேண்டும் என்ற நியதியை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் .ஆயிரம் கணக்கான கிராமங்கள் இன்னும் குடிக்க தண்ணீர் இல்லாமலும் நடக்க சாலைவசதி இல்லாமலும் சுற்றுப்புற சுஃகத்தாராம் இல்லாமலும் இருக்கின்றன .சென்னையை சுற்றிலும் இன்னும் காக்காமுட்டைகள் பறந்துகிடக்கின்றன .அதையெல்லாம் சரிசெய்யமுற்படுங்கள் .இவையெல்லாம் நாட்டின் அவமானசின்னங்கள் .அதைவிட்டுவிட்டு மக்கள் பணத்தில் சிலைவைப்பதுதான் முக்கியம்?
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
11-ஜூலை-202015:40:59 IST Report Abuse
கல்யாணராமன் சு. இப்போது நாவலருக்கு அரசு விழா என்று தொடங்கினால், நாளை கலைஞருக்கும் அரசு விழா எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை வரும்... அதை நிறைவேற்ற இந்த அதிமுக அரசு ஒப்புதல் அளிக்குமா? இந்த அறிவிப்பு ஒரு கட்சி சார்ந்ததாகவே பார்க்கப்படும். ஒரு நடுநிலைமையான செயலாக அல்ல...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X