பொது செய்தி

இந்தியா

ராணுவ அமைச்சர் ராஜ்நாத் லடாக்கில் திடீர் ஆய்வு

Updated : ஜூலை 12, 2020 | Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Defence Minister, Rajnath Singh, ladakh, ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங், லடாக்

புதுடில்லி : ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், காஷ்மீரின் லடாக் பகுதியில், ராணுவ தளபதிகளுடன் நேற்று ஆய்வு நடத்தினார்.

காஷ்மீரின் லடாக் பகுதியில், இந்திய - சீன எல்லையில், சமீபத்தில் இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. சீன வீரர்கள் நடத்திய தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர், வீரமரணம் அடைந்தனர். இதனால், எல்லையில் பதற்றம் நிலவியது. இரு தரப்பும் ராணுவத்தை குவித்தனர்.சுமுக உடன்பாடுஇதற்கிடையே, இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் நடத்திய தொடர் ஆலோசனை காரணமாக, எல்லை பிரச்னையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது.

சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்து, இரு தரப்பும், ராணுவத்தை படிப்படியாக விலக்கிக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இதன்படி, கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, சீன ராணுவம் பின்வாங்கிச் சென்றது. இந்நிலையில் நேற்று, லடாக் பகுதிக்குச் சென்ற ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தலைமை தளபதி நரவானே, கடற்படை தலைமை தளபதி கரம்பீர் சிங், விமானப் படை தலைமை தளபதி பதவுரியா ஆகியோருடன், நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, சீன வீரர்கள், எந்தெந்த பகுதிகளில் இருந்து பின்வாங்கிச் சென்றனர், நம் வீரர்கள் வாபஸ் வாங்கும் இடங்கள் எவை என்பது குறித்து, ராணுவ அமைச்சருக்கு, ராணுவ தளபதிகள் விளக்கினர்.மேலும், சர்சைக்குரிய இடத்திலிருந்து எவ்வளவு துாரம் பின்வாங்கிச் செல்வது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, நெருக்கடியான சூழலில், எந்தவித சவாலையும் சமாளிக்கும் வகையில் செயல்பட்ட ராணுவத்துக்கு, அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.

கல்வான் பள்ளத்தாக்கிற்கு அருகில் உள்ள பகுதி, கேக்ரா ஆகிய இடங்களில் இருந்து, சீன ராணுவம், ஏற்கனவே பின்வாங்கிச் சென்றது. இதன் தொடர்ச்சியாக, பாங்காங் சோ பகுதியிலிருந்தும், நேற்று முன்தினத்திலிருந்து பின்வாங்கிச் செல்லும் நடவடிக்கையை, சீன ராணுவத்தினர் துவக்கியுள்ளனர். முழுமையாக விலகல்இதற்கிடையே, இருநாட்டு உயரதிகாரிகள் மத்தியில், நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது.

மத்திய வெளியுறவுத்துறையின் கிழக்காசிய பிராந்திய இணை செயலர் தலைமையிலான குழுவும், சீன வெளியுறவுத்துறையின் கீழ் வரும் பொது இயக்குனர் தலைமையிலான குழுவும், பேச்சு நடத்தின.இந்த ஆலோசனையில், இரு தரப்பு ராணுவ வீரர்களையும், கிழக்கு லடாக் பகுதியில் இருந்து, முழுவதுமாக விலக்கிக் கொள்வதென, இரு நாட்டு அதிகாரிகளும் முடிவு செய்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
babu -  ( Posted via: Dinamalar Android App )
11-ஜூலை-202015:11:37 IST Report Abuse
babu திடீர்னா?
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
11-ஜூலை-202007:42:05 IST Report Abuse
blocked user வின்சியையும் அழைத்துச்சென்று இருக்கலாமே...
Rate this:
Cancel
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
11-ஜூலை-202002:02:03 IST Report Abuse
குஞ்சுமணி சென்னை சார் அவனுங்க போயிட்டானுங்க நீங்க இப்ப தைரியமா வரலாம் ஓவர் ஓவர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X