அரசியல் செய்தி

தமிழ்நாடு

கல்வி விஷயத்தில் அவசர கதி ஏன்? அரசுக்கு கமல் கேள்வி

Updated : ஜூலை 12, 2020 | Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement
ஆன்லைன், வகுப்பு, கல்வி, அவசரம், கமல், தொலைக்காட்சி வழி கற்றல் ,சாத்திய கூறுகள், மாணவர்கள், கேள்வி

சென்னை: 'கல்வி தொடர்பான விஷயங்களில் தீர ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்' என கமல் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் அறிக்கை: தனியார் பள்ளிகளில் 'ஆன்லைன்' வகுப்புகள் நடந்து வரும் சூழலில் வரும் 13ம் தேதியிலிருந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு 'டிவி' சேனல்கள் வாயிலாக கல்வி போதிக்கப் போகிறோம் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொலைக்காட்சி வழி கற்றலின் சாத்திய கூறுகள் சாதக பாதகங்கள் பற்றி எந்தவித கள ஆய்வும் செய்யாமல் நடைமுறை பிரச்னைகளை பற்றி யோசிக்காமல் அவசரமாக எடுத்த முடிவாகவே தெரிகிறது.

பொருளாதார பாகுபாடுகள் தாண்டி தரமான கல்வி அனைத்து மாணவர்களுக்கும் சமமாக கிடைக்க வேண்டும்.ஒரு வீட்டில் இரண்டு குழந்தைகள் இருந்தால் அவர்கள் எவ்வாறு ஒரு தொலைக்காட்சியின் வழியாக கல்வி கற்க முடியும்? அதைத் தவிர்க்க அரசின் திட்டம் என்ன?அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தொலைக்காட்சி வழி வகுப்புகள் எடுக்க முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு விட்டதா?

மாணவர்களுக்கு பாடத்தில் சந்தேகங்கள் ஏற்பட்டால் அதைத் தீர்க்க யார் உதவி செய்வர்? படிக்காத பெற்றோரால் மாணவருக்கு எப்படி உதவ முடியும்?'டிவி' இல்லாத வீடுகள் கேபிள் இணைப்பு இல்லாத வீடுகளில் உள்ள மாணவர்களுக்கான அறிவுரை என்ன?

குழந்தைகள் கல்வி விஷயத்தில் அரசு அவசரம் காட்டாமல் முன்பின் முரணாக ஆணைகள் பிறப்பிக்காமல் ஆசிரியர்கள் பெற்றோ மற்றும் கல்வித் துறையுடன் கலந்து ஆலோசித்து தரமான கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
12-ஜூலை-202018:14:22 IST Report Abuse
madhavan rajan நீங்கள் கட்சி ஆரம்பிக்கவே 60 ஆண்டு காலம் எடுத்துக்கொண்டீர்கள். உங்களுக்கு எதிலெல்லாம் அவசரம் தேவை இல்லை என்று புரிகிறது. குற்றம் சொல்ல மட்டும் கட்சி நடத்துகிறவர்கள் எதுவேண்டுமானாலும் பேசலாம்.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
12-ஜூலை-202005:51:19 IST Report Abuse
skv srinivasankrishnaveni காமராசர்க்கலாம்லேந்து எக்ஸ் காலம்வரை மாட்டிண்டு தவிக்கும் ஒரே இலாகா கல்விதான் காமராசர் உருப்படியாக செய்தார் கிராமங்கள்லேயும் பிள்ளைகள் படிக்கவேண்டும் குடிசைவாசியானாலும் கல்வி தேவை என்றார் ,திமுக வந்தது எங்கேயும் எதுலேயும் தமிழ் என்று சொல்லிண்டு வதைச்சாங்க பலன் பள்ளி இறுதி முடிஞ்சவங்க கல்லுரிலேயும் இல்லேன்னா எப்படியோ கிடைச்சவேன்=லையே பொதுமனுவாழ்ந்தாங்க இப்போது கிராம மக்களின் விழிப்புணர்வு வரவேற்க தக்கதாக இருக்கு அக்ரி படிப்பை விரும்பிப்படிக்குறாங்க வயலை விற்று இஞ்சினீர் ஆயிட்டு வேலயேகிடைக்காமல் வீட்டுலே குத்துவதை வீட்டா அக்ரிபடிச்சு தன வாயு=பக்கத்துலே சுகமா வாழ முடியும் என்று நம்பிக்கையுடன் வாழுறாங்க இதேதான் பெரியவர் ராஜாஜி குலத்தொழில் கற்பது அவசியம் என்று அப்போது முக அண்ணா எல்லோரும் கேவளமாபேசினாங்க தெரியுமா ?சரித்திரம் (இந்திய அண்ட் உலகம்) அவசியம் தெரிஞ்சுருக்கணும் என்பது உண்மை ஆனால் LKG பாப்பாக்கு எதுக்குயா கம்பியூட்டர் கல்வி யோசிக்கவும் முனுவயசுக்குலந்தியா நரசரிலே சேர்க்க பெத்தவப்படும்பாடு ஐய்யோ சகிக்கலீங்க நாங்கல்லாம் 5வயசு முடிஞ்சுதும் நேராக ஒண்ணாங்கிளாஸ் சேர்ந்தோம் அரசுபள்ளிலேயேதான் 1950 வரை ஆறாங்கிளாஸ்லேந்துதான் ஆங்கிலம் ஆங்கிலம் தெரியாது நெறைய மார்க்ஸ் வாங்கியும் வடக்கே என் அப்பா இருந்தாங்க அதனால் குடியாட்ச்சிக்கு வந்தாச்சு என்று (என் அண்ணாக்கள் இருவரும் ஸ்கூல் முடிச்சுட்டாங்க கல்லூரி லே சேந்தாச்சு ) நாங்கள் அக்கா தங்கை மூவரும் அரசுபள்ளிலேந்து டீ சி வாங்கிண்டு போனால் அங்கே கல்கத்தாலே தமிழ்ப்பள்ளிலேதான் செந்தோம் நான் ஆறாம் வகுப்பும் என் ரெண்டு அக்காவும் 8 த் 9த் சேரவேண்டும் ஆங்கிலம் தெரியலே என்று என்னை ரெண்டாம்கிளாஸ் லேயும் என் அக்காக்களி 7ம் வகுப்பு 8ம்வகுப்புலேயும் சேர்த்துண்டாக அவர்கல் ரெண்டுபேரும் படிக்கமறுத்துட்டாங்க ப்ரைவேட்டேக படிச்சு மெட்ரிக் முடிச்சாங்க ஆனால் என்னைகாம்பெல் பண்ணி 2ம் கிளாஸ்லேதான் போட்டாரு என் அப்பா வெறுத்துப்போயிட்டேன் எரிச்சல் மனஉளைச்சல் என்று ரொம்பவே அட்மென்ட் குழந்தையாக மாறினேன் எப்போதும் கோபம் அழுகை காத்தல் என்று நன்னபடிச்ச என்னை மீ=உந்மகிளாஸ்லேந்து 5ம்கிளாஸ்க்கு டபுள்ப்ரமோஷன் வாங்கின என்னை மீண்டும் ரெண்டாம்கிளாஸ்லேந்து படிக்கவச்சது ஆங்கிலம் மீது அவ்ளோ வெறுப்பு வரக்காரணம் ஆச்சு நம்பவேமாட்டீங்க என் தந்தையின் வீண் வீம்பினால் என் கல்லூரி லேபடிக்கணும் என்ற ஆசையே செத்துப்போச்சு பீ ஏ படிச்சு என்ன கடுகுதானே தாளிக்கபோறேன்னுட்டாரு மெட்ரிக் போதும்பொன்னே என்று சொல்லியாச்சு வந்த ஆத்திரம் லே நான் திருமணம் பிறகு படிச்சேன் என் குழந்தைகள் நன்னப்படிக்கவச்சுட்டேன் நான் படிக்கலே என்ற ஆத்திரம் என் மூணுக்குழந்தைகள் சிறந்தபடிப்பாளிகளா இருக்காங்க . இப்போதுள்ள கல்விமுறைகள் பிடிக்கலீங்க தலையை சுத்தி மூக்கைப்பிடிக்கறதபோல இருக்கு கம்பியூட்டர் தெரியுது அவாளுக்கு சரித்திரம் ஜீரோ பூகோளம் குப்பை விஞானம் மட்டுமேதான் கல்வி எஞ்சினீரிங் தான் படிக்கணும் (படிச்சுட்டு வெளியே கிடைக்காமல் வெட்டியா வீட்டுலே குந்திக்கிடக்கலாம் )தன் பிள்ளை பீ இ /எம் டேக் என்று பீத்திக்கலாம் அவ்ளோதான் . ஆள் இந்திய கல்வி மந்திரிகளும் இஷ்டத்துக்கு கல்விய போட்டு ஆட்டிப்படைச்சுண்டுரு இருக்காங்க இப்போதுபோல மாணவர்களும் பீ ஏ எம் ஏ /லிட்ரேச்சக்கார்னு படிக்குதுங்க ஹிஸ்டரி பூகோளம் படிக்குறைவா எவ்ளோ % தேறும் யோட=சிக்கவும் பல்லில் படிக்கும்போது இந்தப்பாடங்கள்லேயும் அவா வாங்கின ம்மார்க்குகள் கேவலமாயிருக்கும் சிலது ஆவெரேஜ் குறையாமல் இருக்கு ம்மனப்பாடம் செய்து தேர்வு எழுதிட்டுபவருங்க பொது அறிவு டிவிலேந்து தெரிஞ்சாலுண்டு நாங்கல்லாம் படிக்கும் பொது ஜீ கே கிளாஸ் உண்டு பெண்களுக்கு தையல் வகுப்புண்ண்டு கூகிரி கிளாஸ் உண்டு இதுக்காகவே அவினாசிலிங்கம் ஐயா அவர்கள் ஹாம் சயின்ஸ் கல்லூரி துவக்கினாங்க கோவை லே இன்னிவரை பெஸ்ட் ஆகி நடக்கும் கல்லூரி அது கல்விக்கு ஐயா ஆற்றிய பல தொண்டுகள் அவ்ளோபிரபலம்
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
11-ஜூலை-202023:07:30 IST Report Abuse
Allah Daniel ஆன்லைனில் கட்சியை நடத்தும் இவரு சொன்ன அது கரெக்டா தான் இருக்கும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X