பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு

Updated : ஜூலை 11, 2020 | Added : ஜூலை 11, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

சென்னை; தமிழகம் முழுவதும் நாளை (ஜூலை:12) முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சில தளர்வுகளுடன், வரும், 31ம் தேதி வரை, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு அமலில் இருந்தாலும், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில், அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் போன்றவை, 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



எனினும், கடைகள் திறக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை.அதேநேரம், கொரோனா பரவலை தடுப்பதற்காக, இம்மாதம் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும், மாநிலம் முழுதும், எவ்வித தளர்வுகளுமின்றி, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். கடைகள் எதுவும் திறக்கப்படாது. வாகன போக்குவரத்து எதுவும் அனுமதிக்கப்படாது. எனவே, மக்கள் அனைவரும் வெளியில் வராமல், வீடுகளிலே தங்கி இருக்க வேண்டும் என, அரசு தெரிவித்துள்ளது.


latest tamil news



தலைமைச் செயலகம் 2 நாட்கள் மூடல் அரசு அலுவலகங்களில், ஒவ்வொரு மாதமும், இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்று கிழமை, தொற்று தடுப்பு நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இரு தினங்களும், அரசு அலுவலகங்கள் மற்றும் அவை அமைந்துள்ள வளாகம் முழுதும், கிருமி நாசினி தெளிக்க வேண்டும்; வளாகத்தை துாய்மைப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இப்பணி மேற்கொள்வதற்காக, இன்றும், நாளையும், சென்னை, தலைமைச் செயலகம் மூடப்பட உள்ளது. இதேபோல், மற்ற அரசு அலுவலகங்களிலும், இன்றும், நாளையும் கிருமி நாசினி தெளிப்பு உட்பட, நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
11-ஜூலை-202010:37:42 IST Report Abuse
J.Isaac ஞாயிறு ஊரடங்கினால் பிரயோசமில்லை .
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
11-ஜூலை-202009:52:50 IST Report Abuse
g.s,rajan Those who are working in private sector ,factories,????how to go ??? g.s.rajan, Chennai.
Rate this:
Cancel
Sri,India - India,இந்தியா
11-ஜூலை-202009:24:08 IST Report Abuse
 Sri,India தமிழகம் முழுவதுமே நகர்புறங்களில் கட்டாயம் இரண்டு மணிக்கு மேல் வணிக நிறுவனங்களை கடைகளை திறக்க அனுமதிக்க கூடாது .சென்னையில் நோய் குறையும் நேரத்தில் மீண்டும் இரவு எட்டு மணி வரை மக்களை நடமாட அனுமதித்து தளர்வுகள் வழங்கியது மீண்டும் நோய் பரவலை அதிகரிக்கும் வாய்ப்பை உருவாக்கும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X