‛கொரோனா' அச்சுறுத்தலிலும் நடந்த சிங்கப்பூர் தேர்தல்

Updated : ஜூலை 11, 2020 | Added : ஜூலை 11, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

சிங்கப்பூர்: தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் கொரோனா' அச்சுறுத்தலையும் மீறி பார்லிமென்ட் தேர்தல் நேற்று(ஜூலை 10) விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. முககவசம் மற்றும் கையுறைகள் அணிந்தபடி மக்கள் பாதுகாப்பாக ஓட்டளித்தனர்.



latest tamil news


சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லுாங் தலைமையிலான பீப்பிள் ஆக் ஷன்' கட்சியின் ஆட்சி நடக்கிறது. இவரது ஆட்சிக் காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் பிரதமர் லீ முன்னதாகவே தேர்தலை அறிவித்தார். இந்நிலையில் சிங்கப்பூரில் பார்லி தேர்தல் நேற்று நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓட்டுச் சாவடிகளின் எண்ணிக்கை 880ல் இருந்து 1100 ஆக அதிகரிக்கப்பட்டது.


latest tamil news



ஒரு ஓட்டு சாவடியில் 2400 முதல் 3000 பேர் வரை ஓட்டளித்தனர். காலை 8:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப் பதிவு இரவு 8:00 மணி வரை நடந்தது. மக்கள் ஆர்வமுடன் ஓட்டளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை வேளையில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஓட்டளிக்க நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஒட்டு சாவடியில் முககவசமும் கையுறையும் வழங்கப்பட்டன.


latest tamil news


மக்கள் தனி மனித இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பாக ஓட்டளித்தனர். இந்த தேர்தலில் ஆளும் பீப்பிள் ஆக் ஷன் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியாவுக்கு தனி இடம்:


கடந்த 2018ல் பிரதமர் நரேந்திர மோடியின் மூன்று நாள் சிங்கப்பூர் பயணத்துக்குப் பின் தென்கிழக்கு ஆகிய நாடுகளின் சங்கத்தில் இந்தியாவுக்கு சிறப்பான தனி இடம் கிடைத்துள்ளது' என சிங்கப்பூருக்கான இந்திய துாதர் ஜாவேத் அஷ்ரப் தெரிவித்தார். கடந்த 43 மாதங்களாக சிங்கப்பூர் துாதராக பணியாற்றிய இவர் நாளை முதல் ஐரோப்பிய நாடான பிரான்சுக்கான இந்திய துாதராக பதவி ஏற்க உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
11-ஜூலை-202006:04:02 IST Report Abuse
Sanny @வெகுளி ஜி, திமுகவுடன் சிங்கப்பூர் அரசியலை ஒப்பிட முடியாது, உங்க அறிவு வியக்குது ஹீ....ஹீ......
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
11-ஜூலை-202002:21:07 IST Report Abuse
வெகுளி சிங்கப்பூர் தேர்தல் என்பது நம்ம திமுக தலைவர் தேர்தல்போன்றே சுதந்திரமானது.... ஹி ஹி.... ரெண்டு தேர்தலிலுமே யார் வெல்லுவார்கள் என்று கடைசி நொடி வரைக்கும் தெரியாது..... ஹி ஹி... அப்பனுக்கப்புறம் மகன் என்ற பேச்சுக்கே இடமில்லைன்னா பாத்துக்குங்களேன்.....
Rate this:
Cancel
11-ஜூலை-202001:48:20 IST Report Abuse
S.V ராஜன்(தேச பக்தன்...) தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிச்சவன் எல்லாம் இப்பொழுது இதை புகழ்ந்து சொம்படிக்க வருவானுங்க பாருங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X