ரவுடி விகாஷ் துபே 'என்கவுன்டர்' குழுவுக்கு தலைமை வகித்த தமிழர்

Updated : ஜூலை 11, 2020 | Added : ஜூலை 11, 2020 | கருத்துகள் (50)
Share
Advertisement
vikas dubey, vikas dubey encounter, vikas dubey kanpur, tamil nadu, விகாஷ் துபே 'என்கவுன்டர்' குழுவுக்கு தலைமை வகித்த தமிழர்

சேலம்: உ.பி.யில் ரவுடி விகாஷ் துபே என்கவுன்டர் குழுவுக்கு தலைமை வகித்தவர் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார்.

தமிழகத்திலுள்ள, சேலம் மாவட்டம், கொளத்துார், லக்கம்பட்டி ஊராட்சி, மலையடிவாரமுள்ள சின்னதண்டாவைச் சேர்ந்த, விவசாயி பிரபு, 63. இவரது மனைவி சுபத்ரா, 54. இவர்களது, ஒரே மகன் தினேஷ்குமார், 33. இவர், பள்ளி படிப்பை, மேட்டூர் செயின்ட்மேரீஸ், சேலம் வித்யாமந்திர், ஈங்கூர் கங்கா மெட்ரிக் பள்ளிகளில் முடித்தார். கோவை வேளாண் பல்கலையில், பி.எஸ்சி., முடித்து, ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதினார்.


latest tamil news



கடந்த, 2009ல், ஐ.பி.எஸ்.,சுக்கு தேர்வான தினேஷ்குமார், தற்போது உத்தர பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்ட எஸ்.எஸ்.பி., எனப்படும், சிறப்பு காவல் கண்காணிப்பாளராக உள்ளார். தினேஷ்குமார் தலைமையிலான போலீஸ் குழுவினர் தான், நேற்று, ரவுடி விகாஸ் துபேவை, என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.


latest tamil news


இதுகுறித்து, தினேஷ்குமாரின் தந்தை பிரபு கூறுகையில், ''விவசாயம் செய்து தான் மகனை படிக்க வைத்தேன். மகன், சிறு வயது முதலே, நேர்மையாக இருக்கவே விரும்புவான். போலீசாரை சுட்டுக் கொன்ற ரவுடியை, என் மகன் தலைமையிலான குழுவினர் சுட்டுக் கொன்றது பெருமை அளிக்கிறது,'' என்றார்.

தாய் சுபத்ரா கூறுகையில், ''என் மகன், கடைசியாக வீட்டுக்கு வந்து, ஒன்றரை ஆண்டு ஆகிறது. ஒரே மகன் எங்களோடு சேர்ந்திருந்தால் தான் மகிழ்ச்சி. எனினும், தற்போது மற்றொரு மாநிலத்தில், சிறப்பாக பணிபுரிவது பெரும் மகிழ்ச்சி,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
13-ஜூலை-202017:51:01 IST Report Abuse
S. Narayanan ரௌடிகளுக்கு இது தான் முடிவு
Rate this:
Cancel
Sankare Eswar - tuas,சிங்கப்பூர்
13-ஜூலை-202009:30:01 IST Report Abuse
Sankare Eswar ஒருத்தன பத்து இருபது பேர் சேர்ந்து போட்டு தளராது வீரமா? உண்மையான விசாரணை நடத்தப்பட்டு தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். அதுதான் நீதி. எந்த அரசிய வியாதியையோ காப்பாற்ற நடந்த சதி.
Rate this:
Cancel
k.saravanan - Tiruvannamalai,இந்தியா
13-ஜூலை-202005:04:25 IST Report Abuse
k.saravanan இயல்பான தாய் தந்தையர் .இயல்பான அதிகாரி .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X